11 மார்., 2015

போலிக் குற்றச்சாட்டு சுமத்தும் நபர்களின் உள்ளங்களில் கருணை உண்டாகட்டும்!- மஹிந்த ராஜபக்ச


போலிக் குற்றச்சாட்டு சுமத்தும் நபர்களின் உள்ளங்களில் கருணை உண்டாகட்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
யாபஹூவ ரஜமஹா விஹாரையில் நேற்று நடைபெற்ற சமய வழிபாட்டு நிகழ்வுகளில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஆசீர்வாத போதிபூஜையில் பங்கேற்கக் கிடைத்தமை மகிழ்ச்சி அளிக்கின்றது.
போதி பூஜையின் ஊடாக நாட்டுக்கும் படைவீரர்களுக்கும் நல்லாசி வேண்டுகின்றோம்.
ஆட்சியாளர்களின் மனங்களிலிருந்து குரோதம், பொறாமை, பழிவாங்கும் எண்ணங்கள் இல்லாமல் போக வேண்டும் என வேண்டுகின்றோம்.
தொழில்களிலிருந்து நீக்கப்படும் பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு மீளவும் தொழில் வழங்க இந்த ஆட்சியாளர்களுக்கு மனம் வர வேண்டும்.
எமக்கு வாக்களித்த 58 லட்ச மக்களின் நலன்களுக்காக எப்போதும் குரல் கொடுப்போம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.