11 மார்., 2015

சென்னை சுங்க இல்லம் முற்றுகை! வைகோ உள்பட நான்காயிரம் பேர் கைது

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக மாநில அரசு அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காவிரி பாதுகாப்பு இயக்கம் சார்பில் சென்னையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. 

மத்திய அரசு அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை சென்னை சுங்க இல்லம் அருகே மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், காவிரியின் குறுக்கே அணை கட்டினால் சென்னை உள்பட 15 மாவட்டங்களில் குடிநீர் பஞ்சம் ஏற்படும். தஞ்சை, சிவகங்கை மாவட்டங்களில் மீத்தேன் திட்டத்தை காலூன்ற விடாமல் தடுக்கவும் இந்த போராட்டம் நடைபெறுகிறது என்றார். 

சென்னையில் உள்ள மத்திய அரசு அலுவலகமான சென்னை சுங்க இல்லத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. இந்த அறப்போராட்டத்தில், காவிரி பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் வைகோ, கொளத்தூர் மணி, கோவை ராமகிருஷ்ணன், பி.ஆர்.பாண்டியன், லெனின் ராஜப்பா, டாடக்டர் மாசிலாமணி, மல்லை சத்யா, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் அ.கணேசமூர்த்தி, தி.வேல்முருகன், திருஞானம், தெகலான் பாகாவி, த.வெள்ளையன், பெ.மணியரசன், பசீர் அகமது, தியாகு, அருள்குமார் உள்ளிட்ட தலைவர்களும், இருநூறுக்கு மேற்பட்ட அமைப்புகளும் பங்குகொண்டன. இந்த முற்றுகை அறப்போர் காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரை பல கட்டங்களாக நடைபெற்றது.