புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 மார்., 2015

தாயும் மகளும் ஒரு வருடத்தின் பின் இணைவு

                                                                                  
                     
பிரித்தெடுக்கப்பட்ட ஜெயக்குமாரியும் மகள்  விபூசிகாவும் நேற்று இணைந்து கொண்டர்.
 
கடந்த செவ்வாய்க்கிழமை பிணையில் விடுதலை செய்யப்பட்ட ஜெயக்குமாரி மகாதேவா ஆச்சிரமத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த தனது மகளை நேற்று கிளிநொச்சியில் சந்தித்தார்.
 
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஜெயக்குமாரியும் மகளும்  ஒரு வருடத்தின் பின்னர் சுதந்திரமாக சந்தித்துக் கொண்டனர். 
 
விடுதலைப்புலிகளை மீளக்கட்டியெழுப்புவதற்கு முயற்சித்தார் என்று கூறி  கிளிநொச்சியில் உள்ள அவரது வீட்டில் வைத்துக் கைது செய்யப்பட்ட ஜெயக்குமாரி கடந்த 10 ஆம் திகதி பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
 
எனினும்  அவர் கைது செய்யப்படும் போது பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்கள்  விடுதலைத்தினத்தில் அவரிடம் வழங்கப்படவில்லை.
 
அதனால் உடனடியாக கிளிநொச்சிக்கு வருகைதர அவரால் முடியவில்லை. தனது ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு கடந்த வியாழக்கிழமை கொழும்பு நீதவான் நீதிமன்றத்திடம் கோரியிருந்தார்.
 
அதற்கமைய கடந்த வெள்ளிக்கிழமை அவரது ஆவணங்கள் கையளிக்கப்பட்டிருந்தன.ஆவணங்களைப் பெற்றுக் கொண்ட ஜெயக்குமாரி உடனடியாக கிளிநொச்சிக்கு வருகை தந்து தனது மகளைச் சந்தித்தார்.
 
இதேவேளை, விளக்கமறியலில் இருக்கும்  போது விபூசிகா தனது தாயாரை நான்கு தடவைகள் சென்று பார்வையிட்டுள்ளார். எனினும் இந்த சந்திப்பு அவர்களது சுதந்திரமான சந்திப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
 

ad

ad