புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 மார்., 2015

கின்னஸ் சாதனை படைத்தது அதிமுக மகளிர் அணி!


மகளிர் தினத்தையொட்டி, அதிமுக சார்பில் நடைபெற்ற மருத்துவ முகாமில், 2 ஆயிரத்து 37 பேருக்கு ஒரே இடத்தில் மார்பக புற்றுநோய் பரிசோதனை செய்து கொண்ட நிகழ்வு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அதிமுக மகளிர் அணியின் சார்பில் தமிழ் நாட்டில் 10 இடங்களில் மகளிருக்கான சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. குறிப்பாக, இந்த மருத்துவ முகாம்களில் மகளிருக்கான மார்பகப் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அனைத்து முகாம்களிலும் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். 

தருமபுரி மாவட்டம், தருமபுரி நகரத்தில் கடந்த 6ஆம் தேதி நடைபெற்ற மருத்துவ  முகாமில் மட்டும் 2,037 பெண்கள் பங்கு கொண்டு மார்பகப் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகளை செய்து கொண்டனர். ஒரே இடத்தில் 2,037 பேர் மார்பக புற்றுநோய் பரிசோதனை செய்துகொள்வது என்பது உலக சாதனையாகக் கருதப்படுகிறது. இதற்கு முன் ஒரே இடத்தில் 971 மகளிர் மார்பகப் புற்றுநோய் பரிசோதனையை மேற்கொண்டதாகக் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் பதிவாகி இருக்கிறது.

இந்த உலக சாதனை நிகழ்வினையொட்டி உலக கின்னஸ் சாதனை நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ நடுவர் லுசிகா, அதிமுக மகளிர் அணிச் செயலாளர் எல்.சசிகலா புஷ்பாவிடம் வழங்கினார்.

ad

ad