புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 மார்., 2015

தமிழர்களின் மரபை மீறிய மோடியின் யாழ்பாண பயணம்; ஈழத்தமிழர்கள் வேதனை

 

இரண்டு நாள் பயணமாக கடந்த 13, 14ஆம் தேதிகளில் இலங்கை சென்றார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி. அனுராதபுரம், தலைமன்னார், தமிழர்களின் தலைநகரான யாழ்பாணம் போன்ற இடங்களுக்கு பயணம் மேற்கொண்டார்.

இந்த பயனத்தின் போது, நீண்ட நாளாக செய்யபடாமல் இருந்த, தலைமன்னார்-கொழும்பு ரயில் போக்குவரத்தை துவக்கி வைத்தார். யாழ்பாணத்தில், இந்திய அரசின் சார்பாக தமிழ் மக்களுக்கு கட்டப்பட்டுள்ள வீடுகளை அவர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

ஈழப்போருக்கு பிறகு யாழ்பாணம் செல்லும் இரண்டாவது வெளிநாட்டு பிரதமர் என்ற சிறப்பை நரேந்திர மோடி பெற்றுள்ளார். ஆனால், முதன் முதலாக யாழ்பாணம் சென்ற பிரிட்டிஷ் பிரதமர் கேமரூன் யாழ்பாணத்தில் இருந்த தமிழர்களிடம் நடந்துகொண்டது போல எதார்த்தமாக இல்லை.
இலங்கை, மற்றும் இந்திய அதிகாரிகளின் வழிகாட்டுதலின் படிதான் மோடி நடந்து கொண்டார். 
அவர்களின் கட்டுப்பாட்டை கடந்து வெளியே வந்து மக்களின் பிரச்சனைகளை தெரிந்துகொள்ள அவர் முயற்சிக்கவில்லை. இவரது பயணத்தால் எங்களுக்கு எந்த வித நன்மையையும் ஏற்படப்போவதில்லை என்று ஆதங்கப்படும் தமிழீழ மக்கள், இதுவரையிலும், யாழ்பாணம் வந்த அனைத்து வெளிநாடு மாற்றும் உள்நாட்டு தலைவர்களும் முதலில் நல்லூர் கந்தசாமி கோவிலுக்கு சென்று விட்டுதான் பிறகு, வேறு இடங்களுக்கு செல்வார்கள்.

நல்லூர் கந்தசாமிகோவில் தமிழ் மக்களின் ராஜதானி என்று சொல்லும் அவர்கள், மன்னர் காலம் தொட்டு தமிழர்களின் பிரச்சனைகள் குறித்த அனைத்து முடிவுகளும் நல்லூர் கந்தசாமி கோவிலில் தான் மேற்கொள்ளப்படும், தமிழ் மண்ணுக்கு யார் வந்தாலும் முதலில் கந்தசாமி கோவிலுக்கு சென்று அந்த மண்ணை மிதித்துவிட்டுதான் வேறு இடங்களுக்கு செல்வார்கள்.

அதுபோலவே, கிறித்துவர்கள், மற்றும் ஐரோப்பிய நாட்டு தலைவர்கள் வந்தால், அவர்கள் யாழ்பாணம் ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவரை(பிஷப்) சந்தித்து பேசுவார்கள். இது காலகாலமாக கடைபிடிக்கப்படும் நடமுறை. அல்லது வெளிநாட்டு தலைவர்கள் வரும் முன்னரே, அந்த நாட்டின் தூதர் கந்தசாமி கோவிலுக்கும், பிஷப்பிடமும் சென்று தங்கள் நாட்டு தலைவர் வருவது குறித்து பேசுவார்கள்.

ஆனால், இந்த நடைமுறைகள் நன்கு தெரிந்திருந்தும், இந்திய அதிகாரிகள் அதை கடைபிடிக்கவில்லை. அதே நேரத்தில், அனுராதபுரத்தில் உள்ள புத்தர் கோவிலில் உள்ள அரச மரத்துக்கு மரியாதையை செலுத்தி பவுத்த சிங்களவர்களுக்கு மரியாதையை செய்துள்ளார்.
மோடியின் பயணம் காலம் காலமாக தமிழீழத்தில் கடைபிடித்து வந்த மரபுகளை மீறி எங்களை வேதனைப்பட வைக்கிறது என்று யாழ்ப்பான தமிழர்கள் தெரிவித்தனர்.

ad

ad