புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 மார்., 2015

அரசியல் கைதிகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கவும்; தேசிய பாதுகாப்புச் சபைக்கு ஜனாதிபதி உத்தரவு


பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பான அறிக்கையை தனக்கு
சமர்ப்பிக்குமாறு தேசிய பாதுகாப்புச் சபைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.
 
 
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்ட ஜெயக்குமாரி பிணையில் விடுதலை செய்யப்பட்டார். வழக்குத் தாக்கல் இன்றி 182 முதல் 189 பேர் வரையானோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று நீதி அமைச்சர் அண்மையில் தெரிவித்திருந்தார். 
 
எனவே, இவர்கள் தொடர்பில் எத்தகைய நடவடிக்கை எடுக்கப்படும்? என எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே ஜனாதிபதி மைத்திரிபால மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
 
அவர் மேலும் தெரிவிக்கையில், 
 
புதிய அரசு ஆட்சிக்கு வந்து இரண்டு மாதங்களே ஆகின்றன. இந்நிலையில், நாம் முக்கிய சில நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். 
 
அந்த வகையில், தடுத்துவைக்கப்பட்டுள்ளோர் விவகாரத்தில் வழக்குத் தொடர முடியுமா? அவர்களை விடுதலை செய்வதற்கு ஏதுவான நிலை காணப்படுகின்றதா? என்பது உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய அறிக்கையை சமர்ப்பிக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளேன். 
 
அந்த அறிக்கை இன்னும் ஓரிரு வாரங்களில் கிடைக்கும். அதன்பின்னர் தேவையான நடவடிக்கை முன்னெடுக்கப்படும். 
 
குறிப்பாக விடுதலை செய்யப்பட்டால், அவர்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு இடமளிக்கப்பட வேண்டும். அது அடிப்படைஉரிமை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

ad

ad