புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 மார்., 2015

எலியாட் அபார ஆட்டம் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து


ஆக்லாந்த்:உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு நியூசிலாந்து அணி தகுதி பெற்றது
 

உலககோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி ஆட்டம் இன்று ஆக்லாந்தில் நடைபெற்றது. இந்த முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியும், தென்னாப்ரிக்க அணியும் மோதுகின்றன. இதில், டாஸ் வென்று தென்னாப்ரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.

பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கிய தென்னாப்ரிக்க அணி, 38 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 216 ரன் எடுத்து விளையாடி வருகிறது. இதில், ஃபேப் டூப்லிசிஸ் 82 ரன்களுடனும் டி வில்லியர்ஸ் 60 ரன்களுடனும் விளையாடினர்.
இதில், 10 ரன்னில் ஆம்லா முதல் விக்கெட்டை பறிகொடுத்தார். டிகாக் 14 ரன்னில் 2வது விக்கெட்டை இழந்தார். ரோசவ்  39 ரன்களுக்கு 3வதாக அவுட் ஆனார்,ஆனால் தென்ஆப்ரிக்க அணியின் கேப்டன் டி வில்லியர்ஸ் களமிறங்கிய பிறகு பந்து அடிக்கடி பவுண்டரி எல்லையை தாண்ட ஆரம்பித்தது. மறுமுனையில் டுப்ளசிசும் விளாச ஆரம்பித்தார்.
தென்ஆப்ரிக்க அணியின் ரன் வேகம் மளமளவென உயரத் தொடங்கியது.  38 ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அணி, 3 விக்கெட்டுகளை இழந்து 216 ரன்களை எடுத்திருந்தது. அப்போது மழை பெய்யத் தொடங்கியதால், மழை பெய்ய  ஆரம்பித்துவிட்டது. எனவே ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது
பின்னர் மழை நின்றதும் ஆட்டம் மீண்டும் தொடங்கியது. அப்போது 43 ஓவராக குறைக்கப்பட்டது. தொடர்ந்து டுப்லெசிசும் டி வில்லியர்சும் களமிறங்கினர். டுப்லெசிஸ் 87 ரன்னில் அவுட் ஆனார். பின்னர் களமிறங்கிய மில்லர் அதிரடியாக விளையாடி 18 பந்துகளில் 49 ரன் குவித்தார். டி வில்லியர்ஸ் 65 ரன்களுடன் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார். 43 ஓவர்களில் தென்ஆப்ரிக்க அணி 281 ரன்களை குவித்தது. கடைசி 5 ஓவர்களில் மட்டும் தென்ஆப்ரிக்க அணி 65 ரன்களை எடுத்தது குறிப்பிடத்தக்கது. டக்வெர்த் லீவிஸ் விதிப்படி 298 வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியது.அந்த அணியின் கேப்டன் பிரென்டன் மெக்கல்லம் சிக்சரும் பவுண்டரியுமாக விளாசினார். 22 பந்துகளில் 4 சிக்சர் 7 பவுண்டரியுடன் மெக்கல்லம் அரைசதம் கடந்தார். நியூசிலாந்து அணி 6 ஓவர்களில் 71 ரன்களை எட்டிய போது முதல் விக்கெட்டை இழந்தது. 25 பந்துகளை சந்தித்து 59 ரன்கள் எடுத்த மெக்கல்லம் மோர்கல் பந்தில் ஸ்டெயினிடம் பிடி கொடுத்தார். 
தொடர்ந்து கப்திலுடன் இணைந்த வில்லியம்சன் 6 ரன்னில் வெளியேறினார். கப்தில் 34 ரன்களிலும்     ராஸ் டெயிலர் 30 ரன்களிலும் விக்கெட்டை பறிகொடுத்தனர்.
ஆனால் அடுத்து இணைந்த ஆண்டர்சன்,எலியாட் ஜோடி பொறுப்பை உணர்ந்து ஆடியது. இதனால் நியூசிலாந்து அணி மீண்டும் வெற்றியை நோக்கி பயணிக்கத் தொடங்கியது.இந்த தருணத்தில் டி வில்லியர்ஸ் ஒரு அற்புதமான ரன்அவுட்டை கோட்டை விட்டார். இதனால் ஆண்டர்சன் அரைசதம் கண்டார். ஆண்டர்சன் 57 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
எனினும் மறுமுனையில் எலியாட் கடுமையாக போராடினார். இதனால் கடைசி வரை வெற்றி யாருக்கு என்பது மதில் மேல் பூனையாகவே இருந்தது. கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் இந்த ஓவரில் ஒரு பவுண்டரி,சிக்சர் விளாசி எலியாட் வெற்றி தேடி கொடுத்தார்.
எலியாட் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 84 ரன்கள் குவித்தார். 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி, முதல் முறையாக உலகக் கோப்பை இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றது. 

ad

ad