புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

24 மார்., 2015

ரத்கம பிரதேச சபை தலைவர் சுட்டுக்கொலை


ரத்கம பிரதேச சபையின் தலைவர் மனோஜ் புஷ்பகுமார மெண்டிஸ் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். 
நண்பர்களுடன் ஹிக்கடுவையிலுள்ள ஹோட்டலில் தங்கியிருந்த போதே அவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். 
மேலும் தலையில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்ட போது மெண்டிஸின் நண்பர் மரணமடைந்துள்ளார்.
அவருடன் இருந்த நண்பர்களே அவரை சுட்டுக்கொலை செய்துள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.