புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 மார்., 2015

'டண்டனக்கா' பாடல் சர்ச்சை... களத்தில் இறங்கினார் டி.ராஜேந்தர்!




சர்ச்சைக்குள்ளான டண்டனக்கா பாடல் தொடர்பாக இசையமைப்பாளர் இமான், பாடகர் அனிருத் உள்ளிட்ட 4 பேருக்கு
வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் நடிகர் டி.ராஜேந்தர்.

மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் பட நிறுவனம் சார்பாக எஸ்.நந்தகோபால் தயாரிப்பில் உருவாகி உள்ள படம் “ரோமியோ ஜூலியட்”. இதில் ஜெயம்ரவி நாயகனாக நடித்துள்ளார். நாயகிகளாக ஹன்சிகா மோத்வானி - பூனம்பாஜ்வா இருவரும் நடித்துள்ளனர். டி.இமான் இசையில் படத்துக்கு எஸ்.சவுந்தர் ராஜன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கதை, திரைக்கதை எழுதி இப்படத்தை லக்ஷ்மன் இயக்கி உள்ளார்.

இந்த படத்தில் இடம் பெற்றுள்ள டண்டனக்கா பாடல் செம்ம ஹிட்டாகி உள்ளது. 'டண்டனக்கா' என்பது டி.ராஜேந்தர் படங்களில் சொல்லும் பிரபலமான வசனம் என்பது குறிப்பிடத்தக்கது.  டி.ராஜேந்தரின் பாடல் வரியான டன்டனக்கா என்ற வார்த்தையை வைத்து இந்த படத்துக்காக ஒரு பாடலை உருவாக்கியுள்ளனர். இது டி.ராஜேந்தரை கேலி செய்வது போல் இருப்பதாக ஃபேஸ்புக், டுவிட்டரில் ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து இருந்தனர்.

டி.ராஜேந்தரை இழிவுபடுத்துவது போல் இந்த பாடல் இருப்பதாக விமர்சனங்கள் கிளம்பியுள்ளன. இந்த பாடல் வீடியோ இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் அனிருத் இதனை பாடி உள்ளார். 'டண்டனக்கா' பாடலில் டி.ராஜேந்தரை இழிவுபடுத்தவில்லை என்று மறுத்துள்ள ஜெயம்ரவி, 'ரோமியோ ஜூலியட் படத்தில் டி.ராஜேந்தர் ரசிகனாக நான் வருகிறேன். அவரின் தன்னம்பிக்கையே எனது கேரக்டராக இருக்கும். எனவே தான் 'டண்டனக்கா' பாடலை படத்தில் இடம் பெற வைத்தேன். அதில் டி.ராஜேந்தரை அவமதிக்கும் வரிகள் இல்லை. அவரை பெருமைபடுத்துவதாகவே இருக்கும்’ என்று கூறியிருந்தார்.
 
இந்த நிலையில் 'டண்டனக்கா' பாடலை எதிர்த்து டி.ராஜேந்தர் வழக்கு தொடர முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக 'ரோமியோ ஜுலியட்' தயாரிப்பாளர் நந்தகோபால், டைரக்டர் லஷ்மண், இமான், அனிருத் ஆகியோருக்கு அவர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து டி.ராஜேந்தரிடம் கேட்ட போது, 'டண்டனக்கா பாடலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் படி எனது வழக்கறிஞரிடம் அறிவுறுத்தி இருக்கிறேன். அதற்கான வேலைகள் நடந்து கொண்டு இருக்கின்றன’ என்றார்.

இசையமைப்பாளர் இமான் கூறுகையில்,' டி.ராஜேந்தரை பெருமைபடுத்துவது போல்தான் இந்த பாடலை உருவாக்கி உள்ளோம். அவரை இழிவுபடுத்தவில்லை. அவரிடம் இருந்து வக்கீல் நோட்டீஸ் வந்துள்ளது’ என்றார்.

தயாரிப்பாளர் நந்தகோபால் கூறும்போது, 'டண்டனக்கா பாடலில் டி.ராஜேந்தரை கொச்சைப்படுத்தவில்லை. படத்தை பார்க்க அவர் விரும்பினால் தியேட்டர்களில் திரையிடுவதற்கு முன்பாக அவருக்கு காட்ட தயாராக இருக்கிறோம்’ என்றார்.

ad

ad