புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 மார்., 2015

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி - முதல் முறையாக இறுதிப்போட்டியில் நுழைந்தது நியூசிலாந்து




உலககோப்பை கிரிக்கெட்டில் ஆக்லாந்தில் நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியும், தென்னாப்ரிக்க அணியும் மோதின. இதில் டாஸ் வென்று தென்னாப்ரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் ஆடிய தென்னாப்ரிக்கா 5 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் எடுத்தது. 

ஆட்டத்தின்போது மழைக்குறிக்கிட்டதால் டக்வொர்த் லூயிஸ் விதிப்படி 43 ஓவரில் நியூசிலாந்துக்கு 298 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 

தென்னாப்ரிக்கா அணியில் ஹசிம் அம்லா 10, குயின்டன் டீ காக் 14, டுபிளிஸ்சிஸ் 82, ரிலீ ரோசவ் 39, டேவிட் மில்லர் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். டிவில்லியர்ஸ் 65 ரன்களும், டுமினி 8 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். 

298 ரன்களை இலக்காக கொண்டு ஆடிய நியூலாந்து அணி, ஒரு பந்து மீதம் இருக்கையில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதல் முறையாக நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. 

நியூலாந்து அணியில் மார்ட்டின் கப்தில் 34, பிரன்டன் மெக்கல்லம் (கேப்டன்) 59, கனே வில்லியம்சன் 6, ராஸ் டெய்லர் 30, கிரான்ட் எலியாட் 84, கோரி ஆண்டர்சன் 58, லுக் ரோஞ்ச் 8 வெட்டோரி 7 ரன்கள் எடுத்தனர்.

ad

ad