புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 மே, 2015

புலிகளுடையது காட்டுச்சட்டம்: அவை எமக்குச் சரிவராது: வடமாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்

தமிழீழ விடுதலைப் புலிகளால் நடமுறைப்படுத்தப்பட்டு வந்த சட்டங்கள் எல்லாம் காட்டுச் சட்டங்கள் அவற்றையெல்லாம்
இப்போது நடைமுறைப்படுத்த முடியாது இவ்வாறு வடக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் லலித் ஜெயசிங்க தெரிவித்தார்.
 
 யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற சிவில் பாதுகாப்பு குழு கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
 
சுன்னாகம் பிரதேச சபை தவிசாளர் தி.பிரகாஸ், குற்றம் செய்தவர்களே மீண்டும் குற்றம் செய்கின்றனர். இது வாடிக்கையாக இங்கு நடந்து வருகின்றது. குற்றம் செய்தவர்களை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தியதும் அவர்களை சட்டத்தரணிகள் வாதாடி பிணையில் எடுக்கின்றனர்.
 
 இதன் போது பொலிஸார் சந்தேக நபரிற்கு பிணை வழங்குவதற்கு ஆட்சேபனை தெரிவிக்கலாம். அவ்வாறு ஆட்சேபனை தெரிவித்தால் சந்தேக நபர் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்படுவர்.எனவே பொலிஸார் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டு வெளியே வருவது தொடர்பில் தமது ஆட்சேபனையை தெரிவிக்க வேண்டும்.
 
ஒரு நபரே மீண்டும் மீண்டும் அதே குற்றத்திற்காக சிறைக்கு சென்று கொண்டிருக்கிறார். அவர்களிற்கான தண்டணை உடனடியாக வழங்கப்படாததும் தண்டணை குறைவாக வழங்கப்படுவதுமே அவர்கள் குற்றத்தை தொடர்ந்தும் செய்வதற்கு ஏதுவாய் உள்ளது.
 
தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்த காலங்களில் குற்றம் செய்தவர்கள் சார்பாக எந்த சட்டத்தரணியும் நீதிமன்றில் முன்னிலையாக மாட்டார்கள். அதே போன்ற நடமுறையை தற்போதும் பின்பற்ற வேண்டும். என அவர் குறிப்பிட்டார்.
 
இதற்கு பதிலளித்த சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சந்தேக நபர் சட்டத்தரணியை நாடி அவரது உதவியை பெற்றுக்கொள்வதற்கு இலங்கை சட்டத்தில் இடமுள்ளது. நாங்கள் காட்டுச் சட்டங்களின் படி செயற்பட முடியாது என்று அவர் தெரிவித்தா

ad

ad