புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 மே, 2015

கனடாவில் வரலாறு படைத்தது அல்பேட்டா: புதிய ஜனநாயகக்கட்சி ஆட்சியை கைப்பற்றியது


கனடாவில் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்பட்ட அல்பேட்டா மாகாணத்திற்கான தேர்தல் முடிவடைந்து முடிவுகளும் வெளிவந்துள்ள நிலையில், வரலாறாக புதிய ஜனநாயக்கட்சி அறுதிப் பெருபான்மையில் ஆட்சி அமைக்கிறது.
87 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் புதிய ஜனநாயக்கட்சி 53 தொகுதிகளை வென்றுள்ளது. வைல்டு ரோஸ் கட்சி 21 ஆசனங்களை வென்று எதிர்க்கட்சியாகியுள்ளது.
43 ஆண்டுகளாக தொடர்ச்சியாக ஆண்ட கன்சவேட்டிவ் கட்சி 10 தொகுதிகளையே வென்று மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
சனத்தொகையில் கனடாவின் நான்காவது பாரிய மாநிலம் அல்பேட்டாவில் மாகாண சபைக்கான தேர்தல் மே 5ஆம் நாள் செவ்வாய்கிழமை நடைபெற்றது.
இம்மாகாணத்தில் 1971 இற்கு பின்னர் கடந்த 43 ஆண்டுகளாக பழமைவாத வலதுசாரிக் கட்சியான அல்பேட்டா புரோகிரசிவ் கன்சவேட்டிவ் கட்சியே ஆட்சி புரிந்து வந்தது.
வலதுசாரிப் போக்கை அதிகம் கொண்டவர்கள் என்று கருதப்படும் அல்பேட்டாவின் இம்மாற்றம் பலரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது.
அல்பேட்டா கனடாவின் செல்வம் கொழிக்கும் மாகாணம். உலகில் எண்ணெயை தன்னிறைவாகக் கொண்டு அதனை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் கனடாவும் ஒன்று.
அது பெருமளவில் கிடைக்கும் மாநிலமே அல்பேட்டா. இந்நிலையில் எண்ணெயின் விலை சர்வதேச மட்டத்தில் சமீப காலமாக பெரும் சரிவை சந்தித்ததும், அதனால் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளது அல்பேட்டா.
முதன்முறையாக பல ஆண்டுகளின் பின் அது பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது. இந்நிலையில் பல புதிய வரிகளுடன் வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பித்த மாகாண முதல்வர் அதற்கான மக்கள் வாக்கை பெறுவதாகக் கூறி ஒரு ஆண்டுக்கு முன்னரே தேர்தலை அறிவித்தார்.
எதிர்க்கட்சிகள் தயார் இல்லாத நிலையில் நடைபெறும் தேர்தல் தனக்கு அனுகூலமாக அமையும் என அவர் போட்ட கணக்கு தற்போது பிழைத்துள்ளது.
கட்சியின் படுதோல்விக்கு பொறுப்பேற்று தான் அரசியலில் இருந்தே முழுமையாக விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.
மாகாண சபையின் 87 தொகுதிகளுக்காக 2012இல் நடைபெற்ற தேர்தலில் அல்பேட்டா கன்சவேட்டிவ் கட்சி 61 தொகுதிகளையும், வைல்டு ரோஸ் கட்சி 17 தொகுதிகளையும், லிபரல் கட்சி 5 தொகுதிகளையும், புதிய ஜனநாயகக் கட்சி 4 தொகுதிகளையும் வென்றன.

ad

ad