புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 மே, 2015

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் திங்கட்கிழமை தீர்ப்பு?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக  சொத்து குவித்ததாகக் கூறப்பட்ட வழக்கில் திங்கட்கிழமை தீர்ப்பு வழங்கப்படும்
என்று கூறப்படுகிறது.
முன்னதாக இந்த வழக்கில் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டு ஜெயில் தண்டனையும் ரூ.100 கோடி அபராதமும் விதித்தது.
இதை எதிர்த்து ஜெயலலிதா உச்ச நீதி மன்றத்தில்  அப்பீல் செய்தார்.  உச்ச நீதி மன்ற உத்தரவின் பேரில் ஜெயலலிதா அப்பீல் மனு மீதான விசாரணை பெங்களூருவில் நீதிபதி குமாரசாமி முன்னிலையில் நடந்தது.
திட்டமிட்டப்படி 2 மாதத்தில் வழக்கு விசாரணையை நடத்தி முடித்த நீதிபதி குமாரசாமி தீர்ப்பை எழுதினார். இந்நிலையில் பவானிசிங் அரசு வக்கீலாக நியமனம் செய்யப்பட்டது பற்றிய சர்ச்சை எழுந்ததால் நீதிபதி குமாரசாமி தீர்ப்பை நிறைவு செய்வதில் தாமதம் ஏற்பட்டது.
ஆனால் சமீபத்தில் இந்த வழக்கில் தீர்ப்பளித்த  உச்ச நீதி மன்றம் , பவானிசிங் நியமனம் செல்லாது என்று அறிவித்தது. இதையடுத்து நீதிபதி குமாரசாமி தீர்ப்பை மீண்டும் எழுதத் தொடங்கினார். தற்போது அந்த பணி நிறைவு பெறும் நிலையை எட்டியுள்ளது.
நீதிபதி குமாரசாமி தன் தீர்ப்பை எப்போது வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இது பற்றி அடிக்கடி உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அந்த வரிசையில், ஜெயலலிதா வழக்கில் வரும் திங்கட்கிழமை தீர்ப்பு வெளியிடப்படலாம் என்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது. சுப்பிரமணிய சுவாமியும் தன் இணையத்தள பக்கத்தில் 11 ஆம் தேதி தீர்ப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளார்.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சனிக்கிழமை நீதிபதி குமாரசாமி வெளியிடுவார் என்று கூறப்படுகிறது. ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமீன் 12 ஆம் தேதியுடன் முடிகிறது. எனவே அவர் வழக்கில் 11 ஆம் தேதி தீர்ப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது

ad

ad