புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 மே, 2015

பசில், நிஹால், ரணவக்க உள்ளிட்ட மூவரின் பிணை மனுக்கள் நிராகரிப்பு


திவிநெகும நிதிமோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பொருளாதார அபிவிருத்தி
அமைச்சர் பசில் ராஜபக்ச உள்ளிட்ட மூவரதும் பிணை மனுக்களை நிராகரிக்கப்பட்டுள்ளன.
இவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணை நேற்று கடுவெல நீதிமன்றத்தில் எடுத்து கொள்ளப்பட்டுள்ளது.
இதன் போது குறித்த சந்தேக நபர்கள் நால்வரையும் நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல நீதவான் நீதிமன்றம், உத்தரவிட்டுள்ளது.
அத்துடன் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் கட்டண பிரிவிலிருந்து சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றுமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
திவிநெகும கணக்கில் இருந்த 6,500 மில்லியன் ரூபாய் பணத்தை தேர்தல் செலவுகளுக்கு பசில் ராஜபக்ஷ பயன்படுத்தியதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளையடுத்து அவருக்கு எதிராக நிதி மோசடி பொலிஸ் விசாரணைப் பிரிவினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்நிலையில், அவரை கைது செய்ய கடுவெல நீதிமன்றத்தினால் பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டது.
கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலை அடுத்து தனது மனைவியுடன் அமெரிக்காவுக்குச் சென்ற பசில் ராஜபக்ச, நீதிமன்ற உத்தரவை மதித்து, கடந்த மாதம் 21ம் திகதி நாடு திரும்பினார்.
 அதன் பின்னர் கடந்த 22ம் திகதி, நிதி மோசடி பொலிஸ் விசாரணைப் பிரிவுக்குச் சென்று வாக்குமூலமளித்தார்.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் நிஹால் ஜயதிலக்க, திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஆர்.கே.ஏ ரணவக்க ஆகியோரை பொலிஸார் கைது செய்ததுடன் கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது அவர்களை நேற்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அத்துடன், வழக்கு விசாரணையையும் இன்றுவரை ஒத்திவைத்திருந்தது.
இந்நிலையிலேயே, பசில் ராஜபக்ச வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டு சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் கட்டணப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
கடுவெல நீதவான் தம்மிக்க ஹேமபால முன்னிலையில் நேற்று இந்த வழக்கு, மீண்டும் விசாரணை எடுத்துக்கொள்ளப்பட்ட போது, வைத்தியசாலையிலிருந்து அம்பியூலன்ஸ் வண்டி மூலம் பசில் ராஜபக்ஷ, நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இதன்போது, அவர்களை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
அத்துடன், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் கட்டணப் பிரிவில் அனுமதிக்க நீதிமன்றம் அனுமதி வழங்க வேண்டும் என பிரதிவாதிகள் சார்பில் நீதிமன்றில் ஆஜராகியிருந்த சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்தனர்.
அந்த கோரிக்கையை நிராகரித்த நீதவான், சந்தேகநபர்களை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு சிறைச்சாலை வைத்திய அதிகாரிக்கு உத்தரவிட்டதுடன் இந்த கோரிக்கையையும் சிறைச்சாலை வைத்திய அதிகாரிக்கு அனுப்பி வைக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.

ad

ad