வெள்ளி, மே 22, 2015

நீதிமன்ற சூழலில் இடம்பெற்ற அசம்பாவிதத்தில்துண்டிக்கப்பட்ட கைவிரலை விட்டு ஒருவர் தப்பியோட்டம்


யாழ்ப்பாணம் நீதிமன்ற சூழலில் இருந்து துண்டிக்கப்பட்ட கைவிரல் ஒன்று நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
 
நேற்று முன்தினம்  யாழ்ப்பாணம்  நீதிமன்ற சூழலில் இடம்பெற்ற அசம்பாவிதத்தில் சிக்கிய ஒருவருடையதாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 
 
நீதிமன்ற வளாகத்திற்கு முன்னர் பாதுகாப்பு கருதி  போடப்பட்ட இரும்பு கம்பிக்குள் அகப்பட்ட நிலையிலேயே விரல் நுனி மீட்கப்பட்டுள்ளது.
 
நேற்று முன்தினம் இடம்பெற்ற வன்முறை சம்பவத்தையடுத்து பொலிஸாரின்  நடவடிக்கையின்  போது தப்பியோடிய போதே இச்சம்பவம் நிகழ்ந்திருக்கும் என்றும்  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.