புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 மே, 2015

நீதிமன்ற தாக்குதலுக்கு கண்டணம் தெரிவித்து சட்டத்தரணிகள் இன்று ஆர்பாட்டம் முன்வைக்கும் சில கேள்விகள்

நீதிமன்றத்தாக்குதல் உட்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது கைது செய்யப்பட்ட இளைஞர்கள் 130 பேரும் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு குற்றம்சாட்டப்பட்டு அநுராதபுரம் சிறையில் மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்

நீதிமன்ற தாக்குதலுக்கு கண்டணம் தெரிவித்து சட்டத்தரணிகள் இன்று ஆர்பாட்டம் // இவை செய்திகள்
நான் முன்வைக்கும் சில கேள்விகள் அதற்கு சட்டத்தரணிகளும் நீதித்துறையும் காவல்துறையும் பதிலளிக்க முடியுமா?
1)மாணவி காணாமல் போனபோது முறையிடப்பட்ட போது பொலிசார் காலையில் வருவாள் என அசட்டையாக கூறியதற்கு (கடமையினை புறக்கணித்தமைக்கு) என்ன தண்டணை வழங்கப்பட்டது அல்லது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?
2) தென்னிலங்கையில் கிழக்கில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் அரசியல்வாதிகள் பிக்குகள் சிங்கள மாணவர்கள் சம்பந்தப்பட்ட நிறைய மனிதநேயமற்ற ஆர்பாட்டங்களிலும் அவ்வாறான நடைமுறைகள் பின்பற்றப்பட்டு ஆர்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டனரா?
3)பல்வேறு வழக்குகளின்போது பொலிசாரின் அசமந்த நடவடிக்கைகள் குறித்து நீதிபதிகளினால் கடிந்து கொள்ளகப்பட்டதை தவிர என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? அதன்போது ஊடகவியலாளர்களால் எடுக்கப்பட்ட படங்கள் காணொளிகளை எமது நீதிபதிகள் பார்வையிட்டனரா?
4) குற்றவாளிகளிடம் இருந்த படங்கள் காணொளிகள் பொதுவில் பகிரப்பட்டமை எவ்வாறு சாத்தியமாகியது
5) நீதிமன்ற தாக்குதலுக்கு முதல் நாள் நடைபெற்ற அசம்பாவிதங்களை பொலிசார் அறிந்தும் நடவடிக்கை எடுக்காததது ஏன்? இவர்கள் சுதந்திரமாக நடமாடினார்களே?
6) பல்வேறு விடயங்களுக்கு முந்திக்கொண்டு தடை எடுக்கும் பொலிசார் முழு கடையடைப்புக்கும் போராட்டத்திற்கும் தமிழர் ஆசிரியர் சங்கம் அழைப்பு விடுத்திருந்த போதும் தடைசெய்யாதிருந்தது ஏன்?
7)நீதிமன்றிணை அண்மித்து கல்லெறி தூரம் வரை ஆர்பாட்டக்கார்களை அனுமதித்து பின்வாங்கியது ஏன்?
8.)
அ.கிருசாந்தி கொலை வழக்கு நீதி நிலைநாட்டப்பட்டதா?
ஆ.புங்குடுதீவு சாரதாம்பாள ,கோணேஸ்வரி கொலைவழக்கில் நீதி நிலைநாட்டப்பட்டதா?
இ.நெடுங்குளத்தில் பாலியல் வதை செய்யப்பட்டுக் கடித்துக் குதறப்பட்ட 7 வயதுச் சிறுமிக்கு நீதி எங்கே?
ஈ.காரைநகரில் 11 வயதுச் சிறுமியை பாலியல் வதை செய்த வர்களுக்குக்கு என்ன நடந்தது ?
உ.அண்மையில் கூட்டுப் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட வன்னி மாணவிக்கு நீதி எங்கே?
ஊ.இசைப்பிரியாவின் விடயத்தில் நிீதி கிடைத்ததா
இதன்போது எல்லாம் நீதி மறுக்கப்பட்டபோது சட்டத்தரணிகள் என்ன செய்துகொண்டிருந்தார்கள் ?
9)பல மாதங்களுக்கு முன் அச்சுவேலியில் மனைவியின் தங்கையினை விரும்பி குடும்பத்தினை வாளால் வெட்டிக்கொன்றவனுக்கு என்ன தண்டணை வழங்கப்பட்டது(சரீர பிணையில் வெளியில் என்று கேள்வி)?
10) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிறைய கொலை கொள்ளை பாலியல் வன்புணர்வு போதைவஸ்து கடத்தல் நிதிமோசடி ஏறமாற்றல் வழக்குகளில் குற்றவாளிகளை பணத்திற்காக வெளியில் எடுத்து விட்டது யார்?
11) பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட குற்றவாளியான சுவிஸ் குமார் கொழும்பு செல்ல உதவியது யார்?
12) போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த ஆசரியர் சங்கம் மெளனமாக இருப்பது ஏன் அவர்கள் மீது நடவடிக்கையில்லையா?
13) நீதிமன்றத்துக்கு சரியான பாதுகாப்பு வழங்கவில்லை என்று நீதிபதி பொலிசாரை கடிந்துகொண்டாராம் அவர்களுக்கு தண்டணை இல்லையா?
நீதித்துறையும் காவல்துறையும் பல நல்ல விடயங்களையும் செய்து பல வேளைகளில் நீதியை நிலைநாட்டியதையும் இத்தருணத்தில் மறுக்கவில்லை.ஆர்ப்பாட்டக்காரர் சிலர் கல்லெறிந்ததையும் நியாயப்படுத்தவில்லை.தாக்குதலை நானும் கண்டிக்கின்றேன் ஆனால் மேற்குறித்த எல்லா சந்தர்பங்களிலும் அமைதியாக இருந்து ஒத்துழைத்த சட்டத்தரணிகள் நீதி மறுக்கப்பட்டபோது நீதிமன்றத்திற்கு எதிராக போராடுகையில் நடந்த தாக்குதலுக்கு மட்டும் கொடி பிடிப்பது எந்தவகையில் நியாயமானது.
இந்த சட்டத்தரணிகளில் பலர் அரசியல்வாதிகள்(கூட்டமைப்பு மக்கள் முன்னணி ஏனைய தமிழ்கட்சிகள் உட்பட )அவர்கள் சட்டரீதியாக ஏதாவது எமது அரசில் உரிமைக்காக( 19வது திருத்தத்திற்கு ஆதரவாக தவிர) எப்போதாவது வழக்கு தாக்கல் செயதார்களா? இப்போது மக்களுக்கும் இளைஞர்களுக்கும் பாடம் எடுக்கும் இவர்கள் வாக்கு எடுக்க மட்டும் மக்களிடம் எந்த முகத்துடன் வருகின்றார்கள் என்ன கோதாவில் வருகின்றார்கள்? இவர்களை மக்கள் தெரிவுசெய்வார்களா?
அரசியல் நோக்கிலும் நினைவு கூரலுக்காகவும் மட்டும் இரண்டு பேர் சேரந்து அறிக்கை வெளியிட்டும் கூட்டம் வைத்து பேசியும் கலைந்துசெல்லும் பெரும்பாலான அவர்கள் தாம் படித்த சட்டத்தின் ஊடாக மக்களது பொது நலன் அரசியல் தீர்வு சார்ந்து செய்தவைகள் என்ன? ஒரு தீர்வு திட்டத்தினை வரைய முடிந்ததா? நிச்சயமாக சட்டத்தரணிகளில் சிலர் தனிப்பட்ட ரீதியில் பாதிக்கப்பட்டவர்களுக்காக தொடர்நது செயற்படுகின்றார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ஏழைமக்களின் வாழ்வில் சட்டம் விளையாட சட்டத்தரணிகளும் காவல்துறையும்தான் துணைபோகின்றனர்.
அன்றைய போராட்டத்தில் சிலவேளை நான் கலந்துகொண்டிருந்து தவறுதலாக கைதுசெய்யப்பட்டிருப்பின் எனக்காக வழக்கறிஞர் வைத்து வெளியே வந்திருக்கலாம் ஏன் எங்களில் பலருக்கும் இது முடிந்திருக்கலாம் ஆனால் அப்பாவிகள் பலருக்கு அந்தச்சந்தர்பங்கள் ஒருபோதும் கிடைப்பதில்லை. சட்டத்தரணிகள் சிந்திப்பார்களா ? இலங்கையின் நீதித்துறை மறுசீரமைப்பு அவசியம் !
இங்கே நான் சட்டத்தரணிகள் சிலருக்கு tag செய்திருப்பதன்நோக்கம் அவர்கள் மூலமாக அவர்கள் சாரந்தவர்களுக்கு இந்த கேள்விகள் சென்றடையவேண்டும் என்பதற்காக தான் வேறு நோக்கமில்லை

ad

ad