புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

22 மே, 2015

.குற்றவாளிகளால் எடுக்கப்பட்ட மாணவி வன்புணர்வு படங்கள் காணொளிகள் ”வட்ஸ் அப்” இல் உலவுவதாக தகவல்-தவா

தற்போது எனக்கு நண்பர் ஒருவர் சொன்ன தகவல் இது .குற்றவாளிகளால் எடுக்கப்பட்ட மாணவி வன்புணர்வு படங்கள் காணொளிகள் ”வட்ஸ் அப்”
இல் உலவுவதாக தகவல் தெரிவித்தார் 100 வீதம் என்னால் அதனை உறுதிப்படுத்த முடியவில்லை. தான் அதனை பார்த்து மிகவும் மனவருத்தமடைந்து அழித்ததாக கூறினார். அப்படி ஏதாவது காணொளி வந்தால் அதனை பார்க்க நான் தயாரில்லை எனவே பார்த்த கல்நெஞ்சுடைய நண்பர்கள் இருந்தால் உறுதிப்படுத்துங்கள்..அந்த காணொளிகள் படங்களை பார்த்த எந்த இளைஞனும் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு வன்முறைக்கு துாண்டப்படுவான் என்பதை மறுக்க முடியாது
என்னிடம் உள்ள கேள்விகள் !
குற்றவாளிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட அந்த படங்கள் காணோளிகள் எவ்வாறு வெளியில் பரப்பப்பட்டது? பொலிசார் இதற்கு உடந்தையாக இருந்தனரா? அல்லது அதற்கு முன்னதாக அது வெளியானதா? விசாரணை முடுக்கப்படவேண்டும்.
மாணவியின் பெற்றோரால் முதல்நாள் வழங்கப்பட்ட முறைப்பாட்டினை அசட்டையாக எடுத்த பொலிசார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா?
எதிர்ப்பார்ப்பாட்ட வன்முறை தொடர்பில் கைது செய்யப்பட்ட 129 பேரும் உண்மையில் குற்றமிளைத்தவர்கள்தானா? அவர்களில் நிறைய அப்பாவிகள் 3ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். உண்மையில் குற்றமிளைக்காதவர்கள் சிறையில் இருப்பது அநியாயமானது. இறுதியில் சாட்சியம் இல்லை என விடுதலை செய்யப்படுவார்களாயின் அவர்கள் அனுபவித்த தண்டனை மீள எடுக்கப்பட போகின்றதா? எனவே சட்டத்தரணிகள் இது தொடர்பில் சிந்திக்கவேண்டும்.அதில் ஈகோ தேவையில்லை.
வன்புணர்வு குற்றத்துடன் ஒப்பிடுகையில் இது பெரிய விடயமல்ல எனவே இந்த இளைஞர்கள் தொடர்பில் சற்று கவனம் செலுத்தி பிரச்சனையானது 130 பேருடைய பிரச்சனையுடன் அடிபட்டு போகாமல் வன்புணர்வின் பின் கொலை செய்த அந்த 9 பேரின் மீது மையப்படுத்தப்பட வழிசெய்யப்படவேண்டும்.
உண்மையான குற்றவாளிகள் உடனடியாக சிறப்பு நீதிமன்றம் ஏற்படுத்தியாவது விசாரிக்கப்பட்டு இனிமேல் இந்த கேவலமான ஒரு சம்பவம் இங்கு எந்த பெண்ணுக்கும் நடைபெறாமலிருப்பதை உறுதிசெய்யும் வண்ணம் கடுமையான் தண்டணை விதிக்கப்பட ஆவன செ்யப்படவேண்டும். அது வரை எமது போராட்டங்கள் ஓய்வடையக்கூடாது . இது தொடர்பில் சட்டத்தரணிகள் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.
பிடிபட்டுள்ள போராட்டக்காரர் மீது சற்று கருணை காட்டப்படவேண்டும் அவர்கள் செய்தது தவறாயிருக்கலாம் அதற்குரிய ஆரம்ப காரணம் நியாயமானதாக இருந்தது. பல்வேறு தடவைகளிலும் நீதி மன்றங்கள் நீதியை தமிழ் மக்களுக்கு வழங்கியிருக்கவில்லை என்பதையும் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்நன்றி தவா