புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஜூலை, 2015

சுவிட்சர்லாந்தில் இஸ்லாமிய மற்றும் ஆசிய நாடுகளின் சுற்றுலாபயணிகள் கழிவறை இருக்கையை பயன்படுத்தும் அறிவுரை

இஸ்லாமிய மற்றும் ஆசிய நாடுகளில் சேர்ந்த சுற்றுலா பயணிகள்  கழிவறை இருக்கையை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என  ஆலோசனை  வழங்கி கிராபிக் போஸ்டர்களை வடிவமைத்து சுவட்சர்லாந்து வெளியிட்டு உள்ளது.

பல ஆசிய நாடுகளில் பாரம்பரிய கழிவறைகள் நின்ற நிலையிலேயே பயன்படுத்து கின்றனர். ஆனால் வெஸ்ட்ரன் கழிவறைகளிலும் அதே போல் பயன்படுத்து கின்றனர்.அதனால் வெஸ்ட்ரன் கழிவறையில் மேல் ஏறி உடகார்ந்தவாறு பயன்படுத்த  கூடாது  எவ்வாறு உட்கார வேண்டும் என போஸ்டரில் கார்டூன் மூலம்  சரி தவறு என குறிப்பிட பட்டு உள்ளது.அது போல் கழிவறையில் காகிதத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என குறிப்பிட்டு உள்ளது.

அவ்வாறு பயன்படுத்த போஸ்டர் ஒட்டிய இடம் லேக் லுக்சரணில் உள்ள  மவுண்ட் ரிகி ரெயில்வே நிலையமும் ஒன்றாகும்.

இது குறித்து ரெயில்வே மார்கெட்டிங் இயக்குனர் ரோஜர் ஜோஸ் கூறும் போது  நடப்பது என்ன வென்றால் ஆதிபயன்படுத்துபவர்களுக்கு எவ்வாறு உடகார வேண்டும் என தெரிவது இல்லை. அன் மீது ஏறி அமர்ந்து விடுகின்றனர். மேலும்  டாய்லட் பேப்பர்களை  எங்கே போட வேண்டும் என தெரியவிலை கண்ட கண்ட இடங்களில் எறிந்து விடுகிறார்கள். என கூறினார்.

மண்டல சுற்றுலா அதிகாரி மார்சல் புருர் கூறும் போது வளைகுடா பிராந்தியம் மற்றும்  ஆசிய நாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் இங்கு வாழ்பவர்கள் போல் விழிப்புடன் இல்லை. அவர்கள் இயற்கை உபாதையில் இருந்து விடுபட தான் எண்ணுகின்றனர் என  என கூறினார்.

ad

ad