புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஜூலை, 2015

"கருணாநிதி தத்தெடுத்து பின் காணாமல் போன சிறுவன் மணி எங்கே?"

"கருணாநிதி தத்தெடுத்து பின் காணாமல் போன சிறுவன் மணி எங்கே?" என பாலன் தோழர் ஆட்கொணர்வு மனு ஒன்றை சென்னை உயர் நீதி மன்றத்தி
ல் தலைமை நீதிபதியின் கவனத்திற்கு அனுப்பி வைத்து தாக்குதல் செய்ததோடு அந்த சிறுவனுக்கு என்ன நடந்தது என விசாரணை செய்து கண்டு பிடித்து அறியத் தருமாறு தமிழக முதல்வர் செயலலிதாவுக்கும் மற்றும் மனித உரிமை கமிசன் தலைமை நீதிபதிக்கும் அனுப்பி வைத்துள்ளார்.
முக நூலில் சுமார் 60,000 மக்களை சென்றடைந்த இந்த செய்தி காட்டு தீ போல் பற்றிக் கொண்டதை அடுத்து பத்திரிக்கை.காம்என்ற பத்திரிக்கை இதை பிரசுரித்து கேள்வி எழுப்பி உள்ளதோடு இது குறித்து பாலன் தோழரின் வேண்டுதலுக்கு ஏற்ப ஸ்டாலினுடன் இருந்து கட்சியை விட்டு விலகிய இசை வழுதி அவர்களை இது குறித்து தாம் செவ்வி செய்வோம் எனவும் உறுதி அளித்துள்ளனர்.
எழுத்துக்களால் நீதியை மீட்க்கும் போராட்டத்தை செய்ய முடியும் என்பதற்கு இந்த ஆட்கொணர்வு மனு சிறந்த உதாரணம்.
முக நூலில் எழுதி கொண்டு இருக்கும் ஒவ்வொருவருக்கும் இது போன்ற நீதிக்கான எழுத்து வழி போராட்டங்களை நாம் இணைந்தே ஆற்றி வெற்றி பெற முடியும் என பாலன் தோழர் எமக்கு எடுத்துக் காட்டி உள்ளார்கள். பாராட்டுக்கள்.
எழுத்துக்கள் ஆயிரம் பீரங்கிகளுக்கு சமம். நீதிக்காக எம் எழுத்துக்கள் போராடிக் கொண்டே இருக்கட்டும். நாமாக அணி திரண்டால் மக்கள் சக்தியின் பலத்தை பொது தளத்திலும் ஒருங்கிணைத்து நீதிக்காக போராடுவது உறுதியாக முடியும்

ad

ad