புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஜூலை, 2015

போலி முகப்புத்தகக் கணக்குகள் தொடர்பில்1150 முறைப்பாடுகள் பதிவு


இந்த வருட காலப் பகுதியில் இணையத்தளங்கள் தொடர்பில் 1150 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை கணனி அவசர நடவடிக்கை ஒன்றியம் தெரிவித்துள்ளது.

 
போலி முகப்புத்தகக் கணக்குகள் தொடர்பிலேயே அதிகளவிலான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஒன்றியத்தின் சிரேஷ்ட தகவல் தொழில்நுட்ப பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.
 
புகைப்படங்களை போலியான முறையில் பயன்படுத்தி பேஸ்புக் கணக்குகள் திறக்கப்பட்டுள்ளதாக அநேகமானவர்கள் முறைப்பாடு செய்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
அனைவரும் பார்ப்பதற்கு ஏதுவாக புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றமையே குறித்த பிரச்சினைக்கான காரணம் என்பது விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளதாக இலங்கை கணனி அவசர நடவடிக்கை ஒன்றியம் தெரிவித்துள்ளது.
 
பேஸ்புக்கில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்யும்போது நண்பர்கள் மாத்திரம் அதனை காணும் வகையில் பதிவேற்றம் செய்வதன் மூலம் அநாவசிய பிரச்சினைகளை தவிர்த்துக் கொள்ள முடியும் என ஒன்றியத்தின் சிரேஷ்ட தகவல் தொழில்நுட்ப பொறியியலாளர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad