புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஜூலை, 2015

கனடா சஸ்காட்சேவன் வடபகுதியில் பாரிய காட்டுத் தீ! ஆயிரக்கணக்கானவர்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றம். - See more at: http://www.canadamirror.com/canada/45758.html#sthash.4lnjzQvI.dpuf


காட்டுத் தீ கனடா சஸ்காட்சேவன் வடபகுதியில் பரவிச் செல்வதை அடுத்து மேலும் ஆயிரக்கணக்கானவர்கள் வீடுகளில் இருந்து வெளியேறுவது

தொடர்கிறது.இதுவரை வெளியேறியவர்கள் சஸ்கட்சேவன் மாகாணத்திலேயே பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.எனினும் தொடர்ந்து வெளியேறும் சுமார் ஐயாயிரம் பேர் தங்கள் மாகாணத்தில் தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதாக அல்பேர்டா அரசாங்கம் அறிவித்துள்ளது.

அல்பேர்டாவில் ஐயாயிரம் பேர் வரை தங்குவதற்கான வசதிகள் மேற்கொள்ளப்படுவதை சஸ்கட்சேவன்; முதல்வர் பிராட் வோல் உறுதிப்படுத்தினார்.இடம்பெயர்பவர்களை ஏற்றிச் செல்ல இராணுவ விமானங்கள் தேவைப்படும் என பிரதமர் ஸ்டீபன் ஹாப்பரிடம் கோரி இருப்பதாகவும் முதல்வர் வோல் தெரிவித்திருக்கிறார்.
சஸ்கட்சேவனில் கடந்த ஒரு வார காலமாக பரவிச் செல்லும் காட்டுத் தீ காரணமாக சுமார் ஐயாயிரத்து 200 பேர் ஏற்கனவே தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.தீ பரவிச் செல்வதனால் குறைந்தது 7900ம் பேர் வரை வீடுகளில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டி இருக்கும் என சஸ்கட்சேவன் தீயணைப்பு படைத் தலைவர் டுவான் மக்கே தெரிவித்துள்ளார்.இதே நேரம் ஆயிரத்திற்கும் அதிகமான இராணுவத்தினர் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.military
military1
military2
2,879 total views, 2,879 views today
- See more at: http://www.canadamirror.com/canada/45758.html#sthash.4lnjzQvI.dpuf

ad

ad