புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஜூலை, 2015

உலக ஆக்கி லீக் ஆஸ்திரேலிய அணி ‘சாம்பியன்/இந்தியா நான்காம் இடம் .பெண்கள் அணி சம்பியன் நெதர்லாந்துய் இந்திய ஐந்தாவது இடம்


உலக ஆக்கி லீக் அரை இறுதி சுற்று போட்டிகள் பெல்ஜியத்தில் நடந்தது. இதன் ஆண்கள் பிரிவில் இறுதிப்போட்டியில் உலக சாம்பியனான
ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. கடைசி நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி ஆஸ்திரேலிய அணி வீரர் கிறிஸ் சிரிலோ வெற்றிக்கான கோலை அடித்தார். 

முன்னதாக நடந்த 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் இந்திய அணி 1-5 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்திடம் அதிர்ச்சி தோல்வி கண்டு 4-வது இடம் பெற்றது. பெண்கள் பிரிவில் இறுதிப்போட்டியில் நெதர்லாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை சாய்த்து சாம்பியன் பட்டத்தை வென்றது. ஆஸ்திரேலிய அணி 3-வது இடத்தையும், நியூசிலாந்து அணி 4-வது இடத்தையும் பெற்றன. இந்திய அணி 5-வது இடம் பிடித்து அடுத்த (2016) ஒலிம்பிக் போட்டிக்கான வாய்ப்பில் நீடிக்கிறது. 

ad

ad