புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஜூலை, 2015

பல்வேறு கோரிக்கைகளுடன் பிரதமர் மோடியுடன் : வைகோ சந்திப்பு



பிரதமர் மோடியை வைகோ நாடாளுமன்ற கட்டத்தில் சந்தித்தார்.இந்த சந்திப்பில், 20 தமிழர்கள் படுகொலைக்கு நீதி வேண்டும்;நிலம் கையகப்படுத்துதல் மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும் தென்னக நதிகள் இணைப்பு உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண பிரதமர் மோடியிடம் வைகோ கோரிக்கை வைத்துள்ளார்.

இன்று ஜூலை 22 ஆம் நாள், பகல் 12.30 மணிக்கு நாடாளுமன்றக் கட்டடத்தில் உள்ள பிரதமர் அலுவலக அறையில் பிரதமரைச் சந்திப்பதற்கு வைகோவுக்கு நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது. 11.45 க்கெல்லாம் வைகோ அங்கே சென்று விட்டார். பிரதமர் நரேந்திர மோடி 12 மணிக்கே வைகோவை அழைத்தார். உள்ளே நுழைந்தவுடன், ‘நரேந்திர மோடி வைகோவைக் கட்டித் தழுவிக்கொண்டு, நீங்கள் என்னைச் சந்திக்க வந்தததில் மிக்க மகிழ்ச்சி’ என்றார். 

‘நான் தினமும் உங்களை விமர்சித்து வருகிறேன். ஆனாலும் நீங்கள் என் நண்பர். சந்திக்க நேரம் கேட்டவுடனே உடனே வாய்ப்பு அளித்ததற்கு மிக்க நன்றி’ என்றார் வைகோ ‘நீங்கள் உணர்ச்சிடமையமானவர். அதனால்தான் ஈழப்பிரச்சினையை அப்படி அணுகுகிறீர்கள்’ என்றார். 

நான் கடைசியாக உங்களைக் கடந்த ஆண்டு மே 23 ஆம் நாள், நீங்கள் பதவி ஏற்பதற்கு மூன்று நாள்களுக்கு முன்பு குஜராத் பவனில் சந்தித்தேன். நினைவு இருக்கிறதா? என்று வைகோ கேட்டார்.  

‘எப்படி மறக்க முடியும்? நான் யாழ்ப்பாணத்திற்குச் சென்று வந்தேன். ராஜபக்சே விசயத்தில் எப்படி நடந்துகொண்டோம் என்பது உங்களுக்குத் தெரியும் அல்லவா?’ என்றார். ‘நன்றாகத் தெரியும்’ என்றேன். 

‘நான் வந்த நோக்கத்தைச் சொல்லுகிறேன். இலங்கையில்தான் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள் என்றால், இந்தியாவில் அண்டை மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தில் சேசாசலம் வனப்பகுதியில் தமிழ்நாட்டைச் சேர்நத் 20 கூலித் தொழிலாளர்களான தமிழர்கள், ஆந்திர அரசின் வனத்துறையாலும், சிறப்புக் காவல்படையினராலும் மிகக் கொடூரமாகச் சித்திரவதை செய்யப்பட்டுச் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர். 

உண்மையை மறைக்க போலீசுடன் மோதல் என்று கட்டுக்கதையை அவிழ்த்து விட்டனர். சம்பவத்தில் மூன்று சாட்சிகள் நடந்ததைச் சொன்னதன்பேரில், 20 தமிழர்கள் படுகொலை குறித்த உண்மை வெளிவர, மத்திய அரசின் சிபிஐ விசாரணை வேண்டும் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையம்  பரிந்துரை செய்தது. 

ஆனால், இந்தப் படுகொலைகளை மூடி மறைக்கத் தீவிரமாக ஈடுபட்டுள்ள சந்திரபாபு நாயுடுவின் ஆந்திர அரசு, மனித உரிமைகள் ஆணையத்தின் பரிந்துரைக்கு எதிராக, ஆந்திர உயர்நீதிமன்றத்தில் தடை ஆணை பெற்று உள்ளது. 

சொந்த நாட்டிலேயே தமிழர்கள் இப்படிப் படுகொலை செய்யப்படுவது எங்கள் இதயத்தில் நெருப்பை அள்ளிக் கொட்டுகிறது. நீதி கிடைக்க நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று வைகோ சொன்னவுடன், ‘இந்தக் கொலைக் குற்றத்தில் சம்பந்தப்பட்டவர்கள் நிச்சயமாகத் தண்டிக்கப்பட வேண்டும்’ என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். 

இரண்டாவது, நீங்கள் வெற்றி பெற்றவுடன் மே 19 ஆம் நாள், நான் குஜராத் பவனில் உங்களைச் சந்தித்தபோது, விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்கவும், குடிதண்ணீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு காணவும் நதிகள் இணைக்கப்பட வேண்டும். இதற்காக நான் நாடாளுமன்றத்தில் தனிநபர் மசோதா கொண்டு வந்து, அன்றைய வாஜ்பாய் அரசு கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டது என்பதைக் குறிப்பிட்டு விட்டு, முதலில் தென்னக நதிகளை இணைக்க நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொண்டேன். ஆவன செய்வதாக நீங்கள் எனக்கு உறுதி அளித்தீர்கள். அதற்கான வேலைகள் நடக்கவில்லையே? என்று வைகோ கேட்டார். 

‘நதிகள் இணைப்பைச் செயல்படுத்த நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன்’ என்றார் பிரதமர். 

‘பெருமளவு நல்ல தண்ணீர் உப்புக்கடலில் கலந்து வீணாகிறது’ என்று வைகோ கூறியபோது, ஆமாம் என்றார் பிரதமர்.  

மூன்றாவதாக, இந்தியா முழுமையும் உள்ள விவசாயிகள் உங்கள் ஆட்சி ஏற்படும்; தங்கள் துயரம் நீங்கும்; விமோசனம் பிறக்கும என்ற நம்பிக்கையோடு இருந்தார்கள. கடந்த ஆண்டு உங்களிடம் நான், ‘ அமெரிக்காவில் ரூÞவெல்ட் கொண்டு வந்ததைப் போல விவசாயிகளுக்கு ஒரு புதிய விடியல் (NEw Deal) தாருங்கள் என்று கேட்டுக் கொண்டேன். அதற்கு நேர்மாறாக உங்கள் அரசின் செயல்பாடுகள் உள்ளன. 

நான் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்த விவசாயி. அவர்களுடைய துன்பங்களை நேரடியாக உணர்ந்தவன். நிலம் கையகப்படுத்துதல் மசோதா மிகத் தவறானது. காங்கிரÞ கட்சி கொண்டு வந்த இந்த மோசமான திட்டத்தை நீங்கள் ஏன் தூக்கிச் சுமக்கிறீர்கள்? அதனால், விவசாயிகளுக்கு நண்பராக இல்லாமல், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகச்செயல்படுகிறீர்கள் என்ற எண்ணம் ஏற்பட்டு வருகிறது. நாட்டு நலனின் அக்கறை உள்ளவனாக உங்களை வேண்டிக் கேட்கிறேன். தயவுசெய்து, இந்த நிலம் கையகப்படுத்துதல் மசோதாவைக் கைவிடுங்கள் என்றவுடன், பிரதமர் மோடி அவர்கள் உங்கள் வேண்டுகோளை உறுதியாகப் பரிசீலிக்கிறேன் என்றார். 

அதன்பின்னர் பிரதமர் பொத்தானை அழுத்தி, வீடியோ தொலைக்காட்சியினரையும், புகைப்படக் கலைஞர்களையும் உள்ளே அழைத்தார். வைகோ முதலில் அவருக்குப் போர்த்திய பொன்னாடையைத் திரும்ப வைகோ கையில் கொடுத்து அவருக்குப் போர்த்தச் செய்தார். ‘நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் என்னைச் சந்திக்கலாம். இது உங்கள் வீடு. நீங்கள் எப்போதும் வரலாம்’ என்றார்.   

‘பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பிறந்த நாள் அன்றுதான் நீங்களும் பிறந்து இருக்கின்றீர்கள் என்பதை, முன்பு உங்களுக்கு வாழ்த்துச் சொல்லும்போது நான் கூறினேன்’ என்றார் வைகோ. ‘நன்றாக நினைவு  இருக்கிறது’ என்றார் பிரதமர். 

இந்தச் சந்திப்பு இருபது நிமிடங்கள் நீடித்தது. 20 தமிழர்கள் படுகொலை குறித்த கோரிக்கை மனுவைப் பிரதமரிடம் வைகோ கொடுத்தார்.

ad

ad