புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஜூலை, 2015

மஹிந்த - தயாசிறி - ஜோன்ஸ்டன்: விருப்பு வாக்குகளுக்காக கடுமையான போட்டி பெரும்பான்மை அரசு அமைப்பதே ஐ. தே. கவின் குறிக்கோள்


குருணாகல் மாவட்டத்தில் போட்டியிடும் மஹிந்த ராஜபக்ஷ, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, தயாசிறி ஜயசேக்கர ஆகியோரி டையே விருப்பு வாக்குகளுக்காக கடும் போட்டி நிலவுகின்றது. ஆனால் ஐ. தே. க.வுக்கு பெரும்பான்மை அரசாங்கம் அமைப்பதுவே குறிக்கோள் தவிர விருப்பு வாக்கு ஒரு பிரச்சினையல்லவென அமைச்சர் அகில விராஜ் காரியவசம் நேற்று தெரிவித்தார்.
சுமார் 10 வருட காலம் நாட்டின் ஜனாதிபதியாக இருந்தவர். திடீரென குருணாகல் மாவட்டத்திற்கு பரசூட்டில் வந்து தண்ணீர் இல்லை, மின்சாரம் இல்லையென்றும் மருந்தின் விலை
அதிகரித்திருப்பதாகவும் பிரசாரம் செய்வது வேடிக்கையாளது என்று சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் அகில, தொலைக்காட்சி சேவையின் நேரடி ஒளிபரப்பில் தன்னுடன் இவ்விடயங்கள் தொடர்பில் கலந்துரையாட வருமாறும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுத்தார்.
கொழும்பு - 07 இல் அமைந்துள்ள நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் பிரசார அலுவலகத்தில் நேற்றுக் காலை நடத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டிலேயெ அவர் இதனைத் தெரிவித்தார்.
குருணாகல் மாவட்ட எதிர்க்கட்சி வேட்பாளரான மஹிந்த ரஜபக்ஷ விருப்பு வாக்கு தேடுவதற்காக வீடு வீடாகச் செல்கின்றார். சிறிய கூட்டங்களை நடத்துகிறார். மக்கள் சனக்கூட்டம் நிறைந்துள்ள இடங்களுக்கும் செல்கிறார்.
குருணாகல் மாவட்ட வேட்பாளர்களான ஜோன்ஸ்டன், தயாசிறி மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரில் யார் கூடிய விருப்பு வாக்குகளை பெறுவது என்பதிலேயே இவர்களின் கவனமும் போட்டியும் திசைதிருப்பப்பட்டுள்ளது. ஆனால் எமக்கு விருப்பு வாக்கு ஒரு பிரச்சினையே இல்லை. நாம் அதனை எதிர்பார்த்து செயற்படவும் இல்லை. புதிய பாராளுமன்றத்தில் அதிகூடிய ஆசனங்களை கைப்பற்ற வேண்டுமென்ற குறிக்கோளை அடிப்படையாகக் கொண்டே நாம் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றோம்.
விருப்பு வாக்கிற்கும் மேலதிகமாக நாம் மக்களுக்கு 10 இலட்சம் வேலைவாய்ப்பு வழங்கவும், வெளிநாட்டு முதலீடுகளை இலங்கைக்குள் வரவழைக்கவும் தொழிற்சாலைகளை நிறுவவும் ஊழல் மோசடிகளை நிறுத்தவும் நாம் ஆவலுடன் காத்திருக்கிறோம் என்றார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தேர்தல் பிரசாரங்களில் மருந்து விலை கூடியிருப்பதாகவும் தண்ணீர் இல்லையென்றும் கூறுகிறார். 2005 இற்கு பிறகு இவர் இப்பொழுது தான் சொந்தப் பணத்தில் மருந்து வாங்கியுள்ளார். அது தான் திடீரென விழித்ததுபோல மருந்தின் விலைபற்றி அவர் பேசுவது வேடிக்கையாகியுள்ளது.
பத்து வருடம் நாட்டின் தலைவராக இருந்த ஒருவருக்கு இப்போது தான் தண்ணீர் பிரச்சினை பற்றி தெரியவந்துள்ளது. அலரி மாளிகையில் வெளிநாட்டுப் பாணியில் இவர் எத்தனை குளியலறைகளை அமைத்திருப்பார். வெளிநாட்டுப் பாணியில் இல்லாமல் சாதாரண குடிமகனாக இவரால் குளிக்க முடியாதா என்றும் அமைச்சர் இச்சந்தர்ப்பத்தில் கேள்வி எழுப்பினார்.
இதற்கான சரியான பதிலை வழங்குவதற்காக அவருடன் நேரடி தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பங்குபற்ற விரும்புகிறேன். ஐ. ம. சு. மு. வின் வேட்பாளர்களுக்கான தலைவரென்ற வகையிலும் ஐ. தே. கவின் குருணாகல் மாவட்ட வேட்பாளர் என்ற வகையில் நாம் இருவருமே குருணாகல் மாவட்ட பிரச்சினைகள் குறித்து கலந்துரையாட வேண்டும். அதனைவிடுத்து பிறரிடம் சவால் விடுவது வீணானது என்றும் அவர் கூறினார்.
அபிவிருத்தி வேளைகளில் தாங்கள் பணம் உழைத்தார்களே தவிர இளைஞர்களுக்காக இதில் எந்த வேலை வாய்ப்புகளும் வழங்கப்படவில்லை.
பாரிய மைதானங்களில் தேர்தல் பிரசாரம் செய்தவர் தற்போது சிறிய மண்டபங்களில் கூட்டம் நடத்துகிறார். ஆகக் கூடியது. 500 தொடக்கம் 600 வரையிலான மக்களே அதற்கு வருகை தருகின்றனர். அதுவும் பஸ்களில் வேறு மாவட்டங்களிலிருந்து அழைத்து வரப்படுபவர்கள். மதவாச்சியிலிருந்து பஸ் மூலம் கூட்டத்திற்காக அழைத்து வரப்பட்ட ஒரு நபரை பஸ் விட்டு விட்டுச் சென்றுவிட்டது. கையில் ஒரு சதம் கூட பணம் இல்லாத நிலையில் நாம் தான் பணம் வழங்கி அவரை மதவாச்சிக்கு பஸ் ஏற்றிவிட்டோம்.
ஜனாதிபதி தேர்தலின் போது அரசாங்க பஸ்களை பயன்படுத்தியமைக்காக அவர் மூன்றரைக் கோடி ரூபா பணத்தை இ. போ. ச.வுக்கு வழங்க வேண்டும். அன்று ஜனாதிபதியாகவிருந்து அவர் செய்ததை சாதாரண குடிமகனாகவிருந்து அவரால் நிறைவேற்ற முடியவில்லை.
ஸ்ரீ. ல சு. க. வைச் சேர்ந்த மக்கள் தொடர்ந்தும் ஐ. தே. க. வுடன் சேர்ந்த வண்ணமேயுள்ளனர்.
இலங்கையின் எதிர்கால பயணம் ஐ. தே. க. வினாலேயே முன்னெடுத்துச் செல்லப்படும் என்பதனால் அனைவரும் ஐ. தே. கவுக்கு வாக்களிக்க வேண்டுமென வும் அவர் கேட்டுக் கொண்டார்.

ad

ad