புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஜூலை, 2015

மக்கள் எமக்கு அரசியல் பலத்தைத் தரும் பட்சத்தில், வேலணை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட புங்குடுதீவுப் பகுதி மக்களதுவேன்-டக்ளஸ்

மக்கள் எமக்கு அரசியல் பலத்தைத் தரும் பட்சத்தில், வேலணை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட புங்குடுதீவுப் பகுதி மக்களது வாழ்வாதாரத்தை
மேம்படுத்துவதற்கும், அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் உரிய நடவடிக்கைகளை
முன்னெடுக்க முடியுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், முதன்மை வேட்பாளருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.
புங்குடுதீவுக்கு இன்றைய தினம் விஜயம் மேற்கொண்ட செயலாளர் நாயகம் அவர்கள், கேரதீவு, இறுப்பிட்டி, தொழிலாளர்புரம், பெருங்காடு, ஆலடி, கரந்தளி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்களைச் சந்தித்து அவர்களது தேவைப்பாடுகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.
இதன்போது, குடிநீர், மின்சாரம், சுயதொழில் வாய்ப்பு, வீதிப் புனரமைப்பு, போக்குவரத்து, கல்வி மேம்பாடு, வாழ்வாதாரம் உள்ளிட்ட முக்கிய தேவைப்பாடுகள் தொடர்பில் மக்களின் கருத்துக்கள் கேட்டறியப்பட்டன.
இதில் கருத்துத் தெரிவித்த செயலாளர் நாயகம் அவர்கள், மக்களின் வாழ்வாதாரத்தையும், பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் பொருட்டு, சுயதொழில் வாய்ப்புகளை ஏற்படுத்துவது மற்றும் தொழிற்துறைகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அரசியல் பலத்தின் தேவை தொடர்பில் விளக்கமளித்தார்.
இதனடிப்படையில், நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் முழுமையான அரசியல் பலத்தை வீணைச் சின்னத்தில் போட்டியிடும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு வழங்கும் பட்சத்தில், சகல விதமான மக்களின் தேவைப்பாடுகளையும் பிரச்சினைகளையும் உரிய முறையில் தீர்த்து வைக்க முடியுமெனச் சுட்டிக்காட்டினார்.
இதனிடையே, வேலணை 3ம் வட்டாரத்தைச் சேர்ந்த மக்களுடனும் கலந்துரையாடிய செயலாளர் நாயகம் அவர்கள், அல்லைப்பிட்டியிலுள்ள புனித பிலிப் கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் அப்பகுதி மக்களையும் சந்தித்துக் கலந்துரையாடினார்.


ad

ad