புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 அக்., 2015

40 மெற்றிக்தொன் தங்கத்தை ரகசியமான முறையில் ஜப்பான் நிறுவனத்திற்கு விற்ற மகிந்த மற்றும் கப்ரால்


இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலின் அனுமதியுடன் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆலோசனையின் பேரில் சந்தேகத்திற்கிடமான இடைத்தரகர்கள் ஊடாக 40 மெற்றிக்தொன் தங்கம் ஜப்பானிய நிறுவனம் ஒன்றுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
ஜப்பானிய நிறுவனமான ஜப்புட்டா ஹோல்டிங்ஸ் ஊடாக சுயிஸ் செக்யூரிட்டி என்ற நிறுவனத்திற்கு இந்த தங்கம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
ஒரு கிலோ தங்கம் 46 ஆயிரம் அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இடைத்தரகர்களுக்கு தரகு பணமாக ஒரு கிலோ தங்கத்திற்கு 2 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த முழு கொடுக்கல் வாங்கலும் வினைதிறன் அற்ற மற்றும் சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்துள்ளன.
ஜப்பான் நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்ட தங்கம் கே.பி என்ற குமரன் பத்மநாதன் ஊடாக பெற்றுக்கொள்ளப்பட்ட விடுதலைப் புலிகளின் தங்கமாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த தங்க விற்பனையில் ஜப்பான் நிறுவனத்தின் இடைத்தரகராக கொழும்பு வெள்ளவத்தை இலக்கம் 14 5/2 கயா வீதி என்ற விலாசத்தில் வசிக்கும் ராஜகோபால் கார்தீபன் ( அடை.அ.இலக்கம் 833433342V) என்பவரே செயற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மத்திய வங்கியின் இடைத்தரகராக இலக்கம் 77 பள்ளியவத்தை வீதி வத்தளை என்ற முகவரியில் வசிக்கும் சுப்பையா சோமசேகரன் (அடை.அ.இலக்கம் 572573389V) என்பவர் என தெரியவந்துள்ளது.
இந்த கொடுக்கல் வாங்கலில் தமக்கு கிடைக்கும் பணத்தை பகிர்ந்து கொள்ள மேலும் 8 பேருடன் உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டிருந்தது.
சம்பத் சமிந்த கமகே என்ற சட்டத்தரணியே இந்த உடன்படிக்கையை தயார் செய்துள்ளார். இந்த ஒப்பந்தத்தின் படி ஒருவருக்கு 750 மில்லியன் ரூபா வழங்கப்படவிருந்தது.
இதற்கு அமைய அவர்களின் வங்கி கணக்கு இலக்கங்களும் வழங்கப்பட்டிருந்ததுடன் அவற்றின் ஊடாக பங்கு பணம் பகிரப்பட்டுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அந்த வங்கி கணக்குகளின் விபரம் வருமாறு…
டப்ளியூ. கே.ஈ.ஜே.ஏ. சோவிஸ், இலக்கம் – 004031479826078 செலான் வங்கி, மகரகம கிளை.
என்.வை.சீ.எஸ்.குமார இலக்கம் -8430002649 கொமர்சல் வங்கி, சிலாபம் கிளை.
கே. ஜெயராணி இலக்கம் 204-2-001-4-0004005, மக்கள் வங்கி, தலைமையக கிளை.
எச்.எம்.ஜீ.எஸ்.கே. செனவிரட்ன இலக்கம் – 061020042575, ஹட்டன் நஷனல் வங்கி, கல்கிஸ்சை கிளை.
ஐ.பீ.யு. கருணாரத்ன – இலக்கம் 72013332, இலங்கை வங்கி, சீதுவ கிளை.
கே.எம்.ஐ. சமரசிங்க இலக்கம் 1013-5020-8535, சம்பத் வங்கி, மகரகம கிளை.
வை.என். இலங்ககோன் இலக்கம்- 8440039577, கொமர்சல் வங்கி, கம்பஹா கிளை.
எஸ்.சசிதரன் இலக்கம் – 88000157221, கொமர்சல் வங்கி ஆகிய வங்கிக் கணக்குகளில் தரகு பணம் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது.

ad

ad