புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 அக்., 2015

சரணடையும் திட்டத்துக்கு பிரபாவும்,பொட்டுவும் சம்மதிக்கவில்லை : இதுவே வெள்ளைக் கொடி மரணத்துக்கு காரணமாம்எரிக் சொல்ஹெய்ம்

மேற்குலக நாடுகளும் இந்தியாவும் முன்வைத்த சரணடையும் திட்டத்துக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும், புலனாய்வுத்துறைப்
பொறுப்பாளர் பொட்டு அம்மானும் மறுத்துவிட்டனர். வெள்ளைக் கொடியுடன் வந்தவர்கள் மரணமடைய இதுவும் காரணமானது.  இப்படித் தெரிவித்திருக்கிறார் இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம்.

 உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு இலங்கையில் நோர்வேயின் அமைதி முயற்சிகள்' என்ற நூல் வெளியீட்டு விழா லண்டனில் கடந்த புதன்கிழமை இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு பேசியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். வன்னி இறுதிப் போரின்போது விடுதலைப் புலிகள் சரணடைய வைக்க அமெரிக்கா, நோர்வே, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், மற்றும் இந்தியா போன்றவற்றின் ஆதரவுடன் திட்டம் ஒன்று முன்வைக்கப்பட்டது.
இந்தத் திட்டத்தில் விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்கள் சரணடைய வலியுறுத்தப்பட்டது. அத்துடன் சரணடைபவர்களை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் கப்பல் மூலம் ஏற்றிவரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் இந்தத் திட்டத்துக்கு புலிகளின் தலைவர் பிரபாகரனோ, பொட்டு அம்மானோ சாதகமான பதிலைத் தரவில்லை. இதன் விளைவாலேயே வெள்ளைக்கொடியுடன் சரணடைய முயன்றபோது மரணங்கள் ஏற்பட்டன என்றும் இதன்போ சொல்ஹெய்ம் தெரிவித்தார்.

ad

ad