புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 அக்., 2015

லங்கா ஈ நியூஸ் இணைய தளத்திடம் 200 கோடி ரூபா நட்டஈடு கோரி நிபந்தனைக் கடிதம்


லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்திடம் 200 கோடி ரூபா நட்ட ஈடு வழங்குமாறு கோரி மேலதிக சொலிசுட்டர் ஜெனரல், ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல டி லிவரே நிபந்தனைக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
ஊடகவியலாளர் பிரகித் எக்நெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பில் பொய்யானதும் அடிப்படையற்றதுமான தகவல்கள் உள்ளடக்கப்பட்ட செய்திகளை ஊடகம் பிரசுரித்து வருவதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
எனது நன்மதிப்பிற்கு கடுமையான பங்கம் ஏற்படும் வகையில் செய்திகள் பிரசுரிக்கப்பட்டு வருகின்றன என தெரிவித்துள்ளார்.
சட்டத்தரணி காமினி சேனாநாயக்க ஊடாக இந்த நிபந்தனைக் கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.
ஈ நியூஸ் இணையத்தளத்தின் ஆசிரியர் சந்தருவன் சேனாதீரவிற்கு இந்த நிபந்தனைக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் லிவேரா, கோத்தபாய ராஜபக்சவின் சார்பில் செயற்பட்டு வருவதாகவும் வழக்கு விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை எனவும் கடந்த 15ம் திகதி குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது.
இந்த விசாரணைகளுக்கும் தமக்கு எவ்வித தொடர்பும் கிடையாது என லிவேரா தெரிவித்துள்ளார்.
24 மணித்தியாலத்திற்குள் செய்தியை இணைய தளத்திலிருந்து அகற்றி, 200 கோடி ரூபா நட்டஈடு வழங்கப்படாவிட்டால், வழக்குத் தொடர நேரிடும் எனவும் நிபந்தனைக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ad

ad