எகிப்தில் உள்ள சினாய் தீபகற்பம் பகுதியில் ரஷ்ய விமானம் விழுந்து நொறுங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஏர்பஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ரஷ்ய நாட்டு விமானம் Kolavia Flight 7K9268, 212 பயணிகள் மற்றும் 7 பணியாளர்களுடன், எகிப்து நாட்டில் உள்ள ஷர்ம்-அல்-ஷேக் நகரில் இருந்து ரஷ்யா சென் பீட்டர்ஸ்பேர்க் நகருக்கு
அப்போது, எகிப்தில் உள்ள சினாய் தீபகற்பம் பகுதியில் அந்த விமானம் விழுந்து நொறுங்கியதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
செங்கடலை ஒட்டியுள்ள கடற்கரை நகரமான ஷர்ம்-அல்-ஷேக் நகரில் இருந்து திரும்பிய அந்த விமானத்தில் இருந்தவர்கள் பெரும்பாலும் ரஷ்ய நாட்டு சுற்றுலா பயணிகள் என தெரியவந்துள்ளது.
இந்த விபத்தை எகிப்து பிரதமரும் உறுதிப்படுத்தியுள்ளார். இதுதொடர்பாக, எகிப்து பிரதமர் ஷரிப் இஸ்மாயில் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மத்திய சினாய் பகுதியில் ரஷிய பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியதாக கூறப்பட்டுள்ளது.
|