புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 அக்., 2015

மஹிந்தவிடம் இன்றும் தொடர்ந்தது விசாரணை! என்னை பழிவாங்குகின்றனர்! மகிந்த கடும்கோபத்தில்


முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ­விடம் பாரியளவான நிதி மோசடிகள் மற்றும் ஊழல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு இன்று வெள்ளிக்கிழமையும் விசாரணைகளைத் தொடர்ந்துள்ளது. 
நேற்று வியாழக்கிழமை சுமார் 7 மணி நேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், இன்றும் சில மணி நேரங்கள் விசாரணை இடம்பெற்றுள்ளன.
இதேவேளை, இதற்கு முன்னரும் இரு தடவைகள் மஹிந்த ராஜபக்ஷ பாரியளவான நிதி மோசடிகள் மற்றும் ஊழல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியிருந்தார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­ஷவுக்காகச் செய்யப்பட்ட விளம்பரங்களுக்காக, சுயாதீன தொலைகாட்சிக்கு நிதி வழங்காமை தொடர்பிலேயே அவரிடம் இவ்வாறு விசாரணை நடத்தப்பட்டது.
மேலும், முன்னாள் ஊடகத்துறை அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கெஹலிய ரம்புக்வெல, சுயாதீன தொலைக்காட்சியின் முன்னாள் தலைவர் மற்றும் முன்னாள் பொது முகாமையாளர் ஆகியோரிடமும் விசாரணைகள் இடம்பெற்றுள்ளன.
இதேவேளை, தன் மீதான தொடர் விசாரணையை மஹிந்த வன்மையாகக் கண்டித்துள்ளார்.
"இது மிகப் பெரிய உளவியல் பாதிப்பாகும். தொடர்ச்சியாக இவ்வாறு செய்வது என்னைப் பழிவாங்கும் நோக்கிலாகும். வெறுமனே எனது காலத்தை விரயமாக்குகின்றனர்.
என்னுடன் எவ்வித கொடுக்கல் வாங்கல்களும் கிடையாது. எனினும், நான் தொடர்ச்சியாக ஆணைக்குழு எதிரில் பிரசன்னமாகின்றேன். இதனால் எனது நேரம் விரயமாகின்றது" என்று மஹிந்த குற்றம்சாட்டியுள்ளார்.

ad

ad