புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 அக்., 2015

இரவு நேரத்தில் இந்தியா - பாகிஸ்தான் பார்டர் எப்படியிருக்கும்? படம் வெளியிட்டது நாசா!

விண்வெளியில் இருந்து பார்த்தால் இரவு நேரத்தில் இந்தியா- பாகிஸ்தான் பார்டர் பகுதி எப்படியிருக்கும் என்பதை விளக்கும்
வகையில் அமெரிக்காவின்  'நாசா' புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து, கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.  நிகான் டி4  ரக கேமராவில், 28 எம்.எம் ரக லென்ஸ்  பயன்படுத்தப்பட்டு  இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. 
 
இந்த புகைப்படத்தை பார்த்தால்,  இந்தியா-  பாகிஸ்தான் எல்லைப் பகுதி முழுவதும் இரவு நேரத்தில் விளக்கு எரிகிறது. இதனால் அந்த பகுதி மட்டும் ஒரு 'மெல்லிய கோடு' போல அந்த புகைப்படத்தில் தெரிகிறது. 
 
அதுபோல், பாகிஸ்தான் பகுதியில் இந்துஸ் நதி பள்ளத்தாக்கு பகுதியும் அழகாகத் தெரிகிறது.  பாகிஸ்தானின் வர்த்தக தலைநகரமான காராச்சியும் மின்னொளியில் ஜொலிக்கிறது. 

ad

ad