புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 அக்., 2015

அனுமதிப்பத்திரமின்றி பேரூந்துகளை சேவையில் ஈடுபடுத்தினால் சட்ட நடவடிக்கை : டெனீஸ்வரன்

வடக்கு மாகாணத்துக்குள் பல பேரூந்துகள் உரிய முறையில் வழித்தட அனுமதிப்பத்திரம் பெறாமல் சேவையில் ஈடுபடுவது குறித்து பல்வேறு விசனங்களும்
, முறைப்பாடுகளும் எழுந்துள்ளன.

குறித்த அனுமதிப்பத்திரங்கள் இன்றி தங்கள் பேரூந்துகளை சேவையில் ஈடுபடுத்துகின்றவர்கள் தயவுசெய்து தங்களது சட்ட முரணான சேவையினை நிறுத்துமாறு வடக்கு போக்குவரத்து அமைச்சர் டெனீஸ்வரன் எச்சரித்துள்ளார்.
சட்டவிரோதமான முறையில் பேரூந்துகளை சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றமைத் தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இந்த நாட்டில் ஒரு நிமிடமேனும் சட்டம் அமுல்ப்படுத்தப்படமாட்டாது என்று கூறப்படுமானால் இந்த நாடே நரகமாகிவிடும். சட்டத்தினை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்பதன் முக்கியத்துவத்தை நீங்கள் யாவரும் நன்கு அறிவீர்கள்.
ஆகவே ஒவ்வொரு குடிமகனும் சட்டத்தினை கடைப்பிடித்து தங்களது தொழில்களை சட்டத்திற்கு அமைவாக அமைத்துக்கொள்ளவேண்டும் என்றும், இல்லையேல் சட்டம் தனது கடமையை சரியாக செய்யும்’ எனவும் தெரிவித்தார்.
குறித்த வழி அனுமதிப்பத்திரம் இல்லாமல் சேவையினை வழங்குவோர் யாரேனும் இருப்பின் அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து என்னுடன் தொடர்பை ஏற்ப்படுத்துவதன் மூலம் மத்திய அமைச்சருடன் கலந்துரையாடி வெளிமாகாணங்களுக்கான வழி அனுமதிப்பத்திரம் பெறுவது தொடர்பில் பரிசீலிக்கலாம்’ என்றும் அவர் தெரிவித்தார்.

ad

ad