புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 அக்., 2015

தமிழர்கள் திருந்த வேண்டும்!


ஜெனீவாவில் தொடர்ந்து நடைபெற்றுவரும் 30வது மனித உரிமைச் சபையில் கடந்த திங்கட்கிழமை 28 ஆந்தி கதி ஜப்பானைத் தளமாகக் கொண்டு இயங்கும் இன வேறுபாட்டுக்கு எதிரான சர்வதேச அமைப்பு ஸ்ரீலங்கா மீதான பிரேரணையில் சிவில் அமைப்புக்களின் பங்கு என்ற அடிப்படையில் ஒரு கூட்டத்தைக் கூட்டியிருந்தனர்.
இக்ககூட்டத்தை டேவிட் வோலி, தலைமை தாங்கினார். இதனது பேச்சாளர்களாக சுதர்சான குணவர்த்தனா, எஸ். சார்டூர், நிரான் அன்கரேல் ஆகியோர் உரையாற்றினார்கள்.
இக்கூட்டத்தில் உரையாற்றியவர்கள் ஸ்ரீலங்கா மீதான பிரேரணையின் சாதக பாதகங்களை எடுத்துக் கூறியதுடன், இப்பிரேரணை ஸ்ரீலங்கா அரசினால் எப்படியாக நடைமுறைப்படுத்த முடியும் என்பது பற்றியும் கருத்துக் கூறியிருந்தார்கள்.
இதனைத் தொடர்ந்து கடந்த செவ்வாய்க்கிழமை 29 ஆந் திகதி ஜெர்மனியைத் தளமாகக் கொண்டு இயங்கும் ‘மிரட்டப்பட்ட மக்களுக்கான அமைப்பு கூட்டம் ஒன்றை நடாத்தியது.
இக்கூட்டத தொடரில் பலமுக்கிய பேச்சாளர்கள் கலந்துகொண்டனர். நிமல்க பெர்னான்டோ, சுதர்சானகுணவர்த்தன,; பிரதிநிதிகளான வாசுகி, எஸ் சார்டூர்,சுனந்த தேசப்பிரிய ஆகியோர் உரையாற்றினார்கள்.
இவர்கள் சிலரின் உரையில் தற்போதைய பிரேரணை பற்றிய பல சந்தேகங்கள் எழுப்பப்பட்டதுடன் ஸ்ரீலங்காவில் பலர் தொடர்ந்து இராணுவ, பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் கண்காணபிப்தாகவும் கூறப்பட்டது.
இக்கூட்டத்தில் திருமதி. டியேற்றி மக்கோணல் ஸ்ரீலங்காவின் பிரதமர் இப்பிரேரணையில் கூறப்பட்ட விடங்களுக்கு மாறான கருத்துக்களை முன்வைத்து வருவதாகவும் அப்படியானால் இப்பிரேரணையில் கூறப்பட்டவை எப்படி நடைமுறைக்கு சாத்தியமானதாக முடியுமென கேள்விஎழுப்பினர்.
அறிக்கை:
ஐ.நா.மனித உரிமையாளரின் ஸ்ரீலங்கா பற்றிய அறிக்கை, கடந்த புதன்கிழமை மனித உரிமை சபையில் உத்தியோக பூர்வமாக சமர்ப்பிக்கப்பட்டவேளையில், 27 ஐ.நா. அங்கத்து வநாடுகளும் 18 அரசசார்பற்றநிறுவனங்களும் உரையாற்றியிருந்தன.
இவ்வாறு உரையாற்றிய நாடுகளில் சீனா, இந்தியா ஆகிய நாடுகள் அறிக்கை பற்றித் தமது கருத்துக்களை வெளியிடத் தவறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அங்கு உரையாற்றிய பல நாடுகள் இப்பிரேரணை ஒரு முடிவல்ல, ஒரு ஆரம்பமாகும் எனக் குறிப்பிட்டார்கள். அறிக்கை பற்றி உரையாற்றியவர்களில் தமிழ்நாட்டிலிருந்து வருகைதந்த டாக்டர் அன்புமணி, திருமுருகன், வண. பிதா. எஸ் ஜே. இம்மானுவல், திருகோணலையில் கடற்படையினால் படுகோலை செய்யப்பட்ட மாணவனின் தந்தை வைத்திய கலாநிதி மனோகரன், சிவஜிலிங்கம், கஜன் பொன்னம்பலம், சுரேஷ் பிரேமச்சந்திரன், அனந்தி சசிதரன் ஆகியோர் என்பது குறிப்பிடத்தக்கது. 
அரசசார்பற்ற அமைப்புக்கள் சார்பாக உரையாற்றியவர்கள் அறிக்கையின் குறை நிறைகளையும் ஸ்ரீலங்கா மீதான பிரேரணையின் குறை நிறைகளையும் எடுத்துக்கூறியிருந்தனர்
தமிழரின் பரப்புரைகள்
இம்முப்பதாவது கூட்டத்தொடரில் வழமைக்குமாறாக ஸ்ரீலங்காவிலிருந்து இங்கு வருகை தந்தோர் உட்பட பெருந்திரளான தமிழர்கள் ஐ.நாவில் காணப்படுகின்றனர்.
இவர்கள் பல பிரிவுகளாக காணப்பட்ட பொழுதிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் உறுப்பினர்கள், வடமாகாண சபை உறுப்பினர்கள் உலகின் பலபாகங்களிலுமிருந்து இங்கு வருகை தந்துள்ள புலம்பெயர் மக்கள் ஆகியோர் காணப்பட்டனர்.
இவர்களில் பெரும்பாலானோர் தாமும் ஜெனீவா மனிதஉரிமை சபைக்கூட்டத் தொடரில் கலந்து கொண்டோம் என்பதைப் பதிவு செய்வதற்கு வந்துள்ளவர்களாகக் காணப்படுவது வருந்தத்தக்கது.
(இதில் வேடிக்கை என்னவென்றால் சிலர் ஐ.நா ஆறு மொழிகளில் ஒன்றைக் கூடத் தெரியாதவர்களாகக் காணப்பட்ட விஷயம். தமிழ் மொழியைக் கூட ஒழுங்காக எழுத வாசிக்கத் தெரியாதவர்களாககக் காணப்படுவது வியப்பிற்குரியது)
ஐ.நாமனித உரிமைச் செயற்பாடு என்பது ஸ்ரீலங்காவில் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் ஒன்றுஅல்ல. மேற்குநாடுகளில் விசேடமாக ஐ.நா. போன்ற நிறுவனங்களில் நேரம், காலம் ஒருங்கிணைப்பு என்பது மிக முக்கியமானது.
இவற்றைக் கடைப்பிடிக்க முடியாத முக்கியஸ்தர்கள் இப்படியான செயற்பாடுகளில் ஈடுபடுவது ஏற்றகனவே இயங்கிவரும் புலம்பெயர் வாழ் செயற்பாட்டளர்களின் கௌரவத்தைக் குறைக்கும் செயலாகும்.
தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் மணித்தியாலக் கணக்கில் காலதாமதமாக வந்தாலும் கட்சித் தொண்டர்கள் என்ன செய்வது என்ற பெருமூச்சுடன் வரவேற்பார்கள்.
இவர்களை சந்திக்க இருப்பவர்கள் கொடுக்கப்பட்ட நேரத்திற்குப் பின் ஆகக் கூடியது பத்து நிமிடங்களே காத்து நிற்பார்கள். 
உண்மையில் இது காலதாமதமா அல்லது  சில முகங்களைப் பார்க்க விருப்பமில்லாத வெறுப்பான காரணிகளா என்பதற்கு காலம்தான் பதில் சொல்லவேண்டும்.
எனது பார்வையில்
2009 ஆம் ஆண்டு மே மாதம் ஆயுதப் போராட்டமும் தமிழீழ நிர்வாகமும் முற்றுமுழுதாக முடிவுக்கு வந்த பின்னர், புலம்பெயர் வாழ் தமிழ் மக்களிடையே பல பிரிவுகள் ஏற்படத் தொடங்கிய பின்னர், சிறிது சிறிதாக நட்பு, ஒருங்கிணைப்புயாவும் சிதறடிக்கப்பட்டு இன்று சகலநாடுகளில் பெரும்பாலான தமிழ் அமைப்புக்களின் செயற்பாடுகள் கழுதை தேய்ந்து கட்டெறுப்பாகியுள்ளது.
ஆனால் ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமை செயற்பாடுகள் யாவும் தொடர்ந்து வீறுநடை போட்டு வந்தது என்பதையாரும் மறுக்க முடியாது. ஆனால் தற்போதைய நிலையில் இவை யாவும் நாளுக்குநாள் கேள்விக்குறியாகி வருகின்றது.
2009 ஆம ஆண்டின் பின்னர் ராஜபக்ஷவின் ஏற்பாட்டில் டக்ளஸ் தேவானந்தாவினால் உருவாக்கப்பட்ட இருவர் முதலில் ஜெனீவாவை மையமாக வைத்து தமது செயற்பாடுகளை ஆரம்பித்தனர்.
இதில் ஒருவர் தனது யாழ் பல்கலைக்கழக முன்னைய செயற்பாடுகளில் இனம் காணப்பட்டதைத் தொடர்ந்து கலாநிதிப் பட்டம் பெறுவதற்கு படித்துக் கொண்டிருப்பதாகக் கூறி இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்னரே ஜெனீவா அரங்கிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டார்.
மற்றையவர் தனது வெற்றிகரமான செயற்பாடுகளினால் சிலரின் மனங்களைக் கவர்ந்தும் படிப்படியாக ஜெனீவா வேலைத்திட்டங்களை உடைத்து வருகிறார்.
தற்போதைய நிலையில் இன்னும் ஒரு சில வருடங்களில் ஜெனீவா ஐ.நா. மனிதஉரிமை செயற்பாடுகள் முடிவிற்கு வரவுள்ளதாக,
சுருக்கமாக கூறுவதானால் ஜெனீவா செயற்பாடுகளில் இடைவெளிகள் என்பது மிகவும் மோசமாக விரிவடைந்துள்ளது. இது பற்றிய ஓர் கட்டுரையை கூடிய விரைவில் விளக்கமாக எழுதுவுள்ளேன். 
தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
ஒக்டோபர் 1 ஆந் திகதி வியாழக்கிழமை தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இருபத்தேழு ஆதரவு நாடுகள் அனுசரணையுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தியா, தென் ஆபிரிக்கா,ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளிற்கு ஓர் நிரந்தரத் தீரமானம் கொண்டுவரப்பட வேண்டும் எனச் சபையில் கூறியிருந்தனர்.
ஜெனீவாவிலிருந்து ச.வி. கிருபாகரன்
tchrfrance@hotmail.com

ad

ad