புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 அக்., 2015

மாலுசந்தி மைக்கல் கம்பன்ஸ் அணியை 4:1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது

4
மாலுசந்தி மைக்கல் விளை யாட்டுக் கழகத்தினால் அழைக்கப் பட்ட யாழ். மாவட்ட அணிகளுக் கிடையில் நடத்தப்பட்டுவரும் அணிக்கு 7
வீரர்கள் பங்குபற்றும் உதைபந்தாட்டத் தொடரில் யங் கம்பன்ஸ் அணியை 4:1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது பலாலி விண்மீன் அணி.
மைக்கல் விளையாட்டுக் கழக மைதானத்தில் நேற்று முன்தினம் சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆட்டம் ஆரம்பித்தது தொடக்கம் முதல் பத்து நிமிடங்கள் வரை யங்கம்பன்ஸ் அணியின் ஆதிக்கமே மைதானத்தில் நிலை பெற்றிருந்தது. சுதாகரித்துக் கொண்டு தனது ஆட்டத்தை ஆரம்பித்தது விண்மீன். முயற்சியின் பயனாக முதல் கோல் விண்மீன் அணியின் பெயரிலேயே பதியப்பட் டது. அடுத்த ஐந்து நிமிடங்களிலேயே விண்மீனின் சார்பாக மேலும் இரு கோல்கள் பதிவாகி அடுத்த ஐந்து நிமிடங்களிலேயே விண்மீனின் சார்பாக மேலும் இரு கோல்கள் பதிவாகி அந்த அணியின் ஆதிக்கத்தை வலுப்படுத்தியது. பழிதீர்க்க முடியவில்லை யங்கம்பன்ஸால் 3:0 என்று போட்டி முடிவடைந்தது முதல் பாதி.
அந்த அணியின் ஆதிக்கத்தை வலுப் படுத்தியது. பழிதீர்க்க முடியவில்லை யங்கம்பன்ஸால் 3:0 என்று போட்டி முடிவடைந்தது முதல் பாதி. திரில் மாற்றங்கள் ஏதும் இரண்டாவது பாதியில் இடம்பெற வில்லை. இருப்பினும் 8ஆவது நிமிடத்தில் யங்கம்பன்ஸ் அணியின் சார்பாக முதல் கோல் பதிவானது. அதுவே அந்த அணியின் இறுதிக் கோலும் கூட. அதற்கும் பதிலடி கொடுத்தது விண்மீன். வேறெந்த கோல்களும் பதியப்படாத நிலை யில் 4:1 என்ற கோல் கணக்கில் விண்மீன் அணி வெற்றிபெற்றது.

ad

ad