புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 பிப்., 2016

தனிப்படை போலீசார் அதிரடி : தேசியக்கொடியை எரித்த இளைஞர் கைது



தேசியக்கொடியை எரித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட மகேந்திரன் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.  சென்னை ராயப்பேட்டை சைவ முத்தையா தெருவில் பதுங்கியிருந்த மகேந்திரனை தனிப்படை போலீசார் கைது செய்தனர். 

தேசிய கொடியை அவமதித்து தீயிட்டு கொளுத்தும் படங்களை நாகபட்டிணம் இளைஞர் திலீபன் மகேந்திரன் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.  சமூக வலைதளங்களில் இந்த செய்தியும், அதுதொடர்பான படங்களும் வேகமாக பரவின. இதனை கண்டித்துள்ள தேசப்பற்றுள்ளவர்கள், தேசத் தலைவர்கள் மற்றும் தேசிய சின்னங்களை அவமதிப்பதை வழக்கமாக கொண்டுள்ள வர்களை இந்திய அரசாங்கம் வழக்கம் போல வேடிக்கைதான் பார்க்குமா இல்லை நடவடிக்கை எடுத்து தண்டிக்குமா? என்று கேள்வி எழுப்பினர்.

இந்தநிலையில், ’திலீபன் மகேந்திரன் பேஸ்புக்கில் ஞாயிற்றுக்கிழமை (Time:01.05am date:31-01-2016) வெளியிட்டுள்ள பதிவில், நா இந்திய தேசிய கொடிய கொளுத்தல, அப்டின்னு சினிமா நடிகன் மாறியோ, இல்ல அரசியல்வாதி மாறியோ மாத்தி மாத்தி பேச மாட்டேன்..

 நா உழைக்கும் வர்க்கத்திலிருந்து வந்தவன்.. உண்மைய மட்டுமே பேச தெரிஞ்சவன்.. நாந்தான் இந்திய கொடிய கொளுத்துனேன். தேசியக்கொடியை கொளுத்தினால் என்ன தப்பு? ’’இவ்வாறு கூறியிருந்தார்.

மேலும், தமிழ்நாட்டை இந்தியா அடிமைப் படுத்தி வைத்திருக்கிறது. மறுக்க முடியுமா? இந்தியா ஒரு நாடல்ல.  நாங்கள் உழைக்கும் மக்கள்.. எங்க மேல சட்டம் நல்லா பாயும். இது எங்களுக்கு நல்லாவே தெரியும்.. கார்ப்ரேட் கம்பெணிகளின் ஊழியர்கள்தானே இந்திய நீதிமன்றங்கள்...

எனது தமிழினத்தை சூத்திரனாக இழிவுபடுத்தும் அரசியல் சட்டத்தை எரிப்பேன் என்றார் பெரியார். தேசியக்கொடியை எரிக்கும் போராட்டத்தை நடத்தினார் பெரியார். பெரியார் தேசியக் கொடியைக் கொளுத்தி அரை நூற்றாண்டு ஆகிறது. அதற்கான காரணம் இன்னும் இருக்கிறது. இன்னும் கருவறைக்குள் நுழையமுடியாமல் சூத்திரனாகத்தான் கேவலப்பட்டு நிற்கிறோம் என்றும் கூறியிருந்தார். 

ad

ad