புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 பிப்., 2016

பிப். 5ல் டெல்லி செல்கிறார் விஜயகாந்த்... பாஜக தலைவர்களுடன் கூட்டணி குறித்து பேச்சு!

பிப்ரவரி 5-ம் தேதி தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் டெல்லி சென்று பா.ஜ.க. தலைவர்களுடன் கூட்டணி குறித்து
பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழக சட்டமன்றத்தின் பதவிக்காலம் வருகிற மே மாதம் 22-ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே தமிழகத்திற்கு விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேதி இம்மாதம் இறுதியிலோ அல்லது அடுத்த மாதம் (மார்ச்) முதல் வாரத்திலோ அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.

ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் இணைந்து மக்கள் நல கூட்டணி அமைத்துள்ளன. இவர்கள் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்துக்கு தங்கள் கூட்டணிக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளன. அதேபோல், தி.மு.க.வும் விஜயகாந்த்தை இழுக்க முயற்சித்து வருகிறது. பா.ஜ.க. தலைவர்களும் விஜயகாந்த் எங்களது கூட்டணியில்தான் இருக்கிறார் என கூறி வருகின்றனர். ஆனால், இதுவரை கூட்டணி குறித்து விஜயகாந்த் வாய் திறக்காமல் மவுனம் காத்து வருகிறார்.

இந்நிலையில், தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் வரும் 5-ம் தேதி டெல்லி செல்ல இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. டெல்லி செல்லும் அவர் பா.ஜ.க தேசியத் தலைவர் அமித்ஷாவை நேரில் சந்தித்து சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ad

ad