புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 மார்., 2016

மலேசிய பிரதமரை கடத்த திட்டமிட்ட ஐ.எஸ் தீவிரவாதிகள் சதி முறியடிப்பு


மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் மற்றும் 2 உயர் அதிகாரிகளை கடத்த திட்டமிட்ட ஐ.எஸ் தீவிரவாதிகளின் சதி திட்டத்தை பாதுகாப்பு
அதிகாரிகள் முறியடித்ததாக பாராளுமன்றத்தில் மலேசிய துணை பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் அகமத் ஷாகித் ஹமீது தெரிவித்தார்.

நாட்டின் தலைநகர் கோலாலம்பூர் உள்பட நாட்டின் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்த ஐ.எஸ் தீவிரவாதிகளின் திட்டமும் முறியடிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது:-

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி 30 ந்தேதி   பிரதமர் உள்பட 13 தலைவர்களை கடத்த திட்டமிட்டு இருந்தனர். இதில் மாநில உள்துறை அமைச்சரும் ஒருவர் ஆவார். மேலும் கேடக், கோலாலம்பூர், புத்ரஜியா ஆகிய இடங்களிலும் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்தனர். ராணுவ முகாமில் இருந்து ஆயுதங்கள் திருடவும்,  நாட்டின் தலைவர்களை கடத்தி பணம் பறிக்கவும் திட்டமிட்டு இருந்தனர்.ஆனால் மலேசியாவில் ஐ.எஸ் நெட்வொர்க் எதுவும் இல்லை.  சிரியாவில் இருந்து  வரும் உத்தரவுகளை இங்குள்ள செல்ஸ் பெறுகின்றனர்.என கூறினார்.

ad

ad