புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 மார்., 2016

தி.மு.க.வில் நேர்காணல் முடிந்தது: மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டி

03 PM IST
சென்னை,
தி.மு.க.வில் நேர்காணல் முடிந்தது. கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் மீண்டும் போட்டியிடுகிறார்.
நேர்காணல்தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் கடந்த ஜனவரி மாதம் 24–ந்தேதி முதல் பிப்ரவரி மாதம் 10–ந்தேதி வரை விருப்ப மனு பெறப்பட்டது. விருப்ப மனுதாக்கல் செய்தவர்களிடம் கடந்த மாதம் 22–ந்தேதி முதல் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் நடத்தப்பட்டது.

தி.மு.க. தலைவர் கருணாநிதி, பொது செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், முதன்மை செயலாளர் துரைமுருகன், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் நேர்காணல் நடத்தினார்கள்.
அம்பத்தூர், வில்லிவாக்கம், எழும்பூர், திரு.வி.க.நகர், துறைமுகம் மற்றும் கொளத்தூர் ஆகிய 6 தொகுதிகளுக்கு நேற்று நேர்காணல் நடந்தது.
நேர்காணலில் மு.க.ஸ்டாலின்கொளத்தூர் தொகுதியில் தற்போது எம்.எல்.ஏ.வாக இருக்கும், மு.க.ஸ்டாலின் மீண்டும் போட்டியிடவேண்டும் என்று ஏராளமானோர் மனு செய்திருந்தனர். அவரை தவிர்த்து வேறு யாரும் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவதற்கு விருப்ப மனு செய்யவில்லை. மு.க.ஸ்டாலின் நேற்று நேர்காணலில் பங்கேற்றார்.
அவரிடம் கருணாநிதி, க.அன்பழகன் உள்ளிட்ட நேர்காணல் குழுவினர் கேள்விகள் கேட்டனர். அவற்றிற்கு மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார். வேறு யாரும் விருப்பமனு கொடுக்காததால், மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
68 பேர் பங்கேற்புஇதேபோல துறைமுகம் தொகுதிக்கு சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் சேகர்பாபு, அம்பத்தூர் தொகுதிக்கு ஜோசப் சாமுவேல், மாவட்ட வர்த்தகர் அணி இணை செயலாளர் அம்பத்தூர் செ.ஆஸ்டின், எழும்பூர் தொகுதிக்கு தி.மு.க. துணை பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி, வில்லிவாக்கம் தொகுதிக்கு முன்னாள் எம்.பி. வசந்தி ஸ்டான்லி, முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதியின் மகன் பரிதி இளம்சுருதி உள்பட 68 பேர் நேர்காணலில் பங்கேற்றனர்.  12–வது நாளாக நடைபெற்ற நேர்காணல் நேற்றுடன் நிறைவடைந்தது

ad

ad