புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 மார்., 2016

காஷ்மீரில் இந்திய ராணுவம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்கிறது கன்னையா குமார் புதிய சர்ச்சையில் சிக்கினார்


காஷ்மீரில் இந்திய ராணுவம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்கிறது என்று கூறி கன்னையா குமார் புதிய சர்ச்சையில் சிக்கிஉள்ளார். 

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் தலைவர் கன்னையா குமார் கடந்த மாதம் 12-ந்தேதி தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டார். 

திகார் சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு டெல்லி ஐகோர்ட்டு ஜாமீன் வழங்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து அவர் ஜாமீனில் விடுதலை ஆனார். பின்னர் அவர் பேட்டி அளித்தபோது பிரதமர் மோடியையும் பா.ஜனதாவையும் கடுமையாக விமர்சித்தார். ஐகோர்ட்டு கடும் நிபந்தனைகளை விதித்தே ஜாமீன் வழங்கியது. 

இந்நிலையில் காஷ்மீரில் இந்திய ராணுவம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்கிறது என்று கூறி புதிய சர்ச்சையில் சிக்கிஉள்ளார். 

சர்வதேச பெண்கள் தினத்தை யொட்டி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் மத்தியில் பேசிஉள்ள கன்னையா குமார், காஷ்மீரில் இந்திய ராணுவம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்கிறது. மனித உரிமைகளுக்கு எதிரான வன்முறைக்கு எதிராக கோஷம் எழுப்புவேன், காஷ்மீரில் இருந்து ராணுவத்திற்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டத்தை (AFSPA) திரும்பபெற வேண்டும் என்று கூறிஉள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

ad

ad