புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஏப்., 2016

ஊழல் செய்ததற்காக சிறை சென்ற ஒரே முதல்வர் ஜெயலலிதா- பிரகாஷ் ஜவ்டேகர்

 ஊழல் செய்ததற்காக சிறை சென்ற ஒரே முதல்வர் ஜெயலலிதாதான் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் கடுமையாக தாக்கி உள்ளார்.


ஈரோடு மாவட்டம் சூரம்பட்டி நால்ரோட்டில் பா.ஜ.க. தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் பேசும்போது, ''மத்திய அரசின் பல திட்டங்களை அ.தி.மு.க. அரசு தான் கொண்டு வந்த திட்டம் என்று கூறி மக்களை ஏமாற்றி வருகிறது.
தமிழகத்தில் ஏராளமான தென்னை மரங்கள் உள்ளன. ஆனால் தென்னை விவசாயிகளுக்கு மானியம் ஏதும் வழங்கப்படுவதில்லை. மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயிலுக்கு 27 ரூபாய் மானியம் தமிழக அரசு வழங்குகிறது. மலேசிய விவசாயிகளுக்கு நன்மை செய்யும் தமிழக அரசு, சட்டசபை தேர்தலில் மலேசிய விவசாயிகளிடம் தான் ஓட்டு கேட்க வேண்டும். தமிழக விவசாயிகளிடம் ஓட்டு கேட்கக் கூடாது.

ரேஷனில் வழங்கும் அரிசிக்கு 25 ரூபாய்க்கு மேல் மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது. ஆனால் வெறும் 3 ரூபாய் மட்டும் செலவிட்டு விட்டு தாங்கள் தான் அனைத்து செலவுகளும் செய்கிறோம் என்று பொய் பிரசாரம் செய்து வருகின்றனர். இதேபோல் வெள்ள நிவாரணத்துக்கு மத்திய அரசு வழங்கிய நிதியை தமிழக அரசு தாங்கள் வழங்கியது போல் தவறான பிரசாரம் செய்து வருகிறார்கள்.

தி.மு.க–காங்கிரஸ் கூட்டணியை ஊழல் கூட்டணி என்று சொல்லலாம். மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்தபோது 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடிக்கு ஊழல் நடந்தது. காற்றில், நிலத்தில் மட்டும் அல்லாமல் பாதாளத்தையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை. நிலக்கரி சுரங்கத்தை ஏலம் விடுவதிலும் பல லட்சம் கோடி ஊழல் நடந்து உள்ளது.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி வந்ததும் 2ஜி அலைக்கற்றையை பொது ஏலத்தில் விட்டது. இதன் மூலம் ரூ.1 லட்சத்து 96 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்து உள்ளது. நிலக்கரி சுரங்க ஏலம் மூலம் ரூ.3 லட்சம் கோடி அரசுக்கு வருவாய் கிடைத்து உள்ளது. இந்திய அளவில் மாற்றம் வந்து உள்ளது. ஏன் தமிழகத்தில் மாற்றம் வரக்கூடாது. 

ஊழல் செய்ததற்காக சிறை சென்ற ஒரே முதல்வர், இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் உள்ளார். தற்போது உச்ச நீதிமன்றத்தில் அவரது வழக்கு நடந்து வருகிறது. ஊழல் ஆட்சிகள் மீண்டும் வேண்டுமா? ஊழலற்ற–நிர்வாக திறமையான ஆட்சி வர வேண்டுமா என்பதை நீங்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்" என்றார்.

ad

ad