தேமுதிகவில் இருந்து நீக்கப்பட்ட சந்திரகுமார் அணியினர் ‘மக்கள் தேமுதிக’ கட்சியை துவங்கி, திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிடுகின்றனர். இவர்களுக்கு தேமுதிக வழக்கறிஞர் அணி, தேமுதிகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் விஜயகாந்தின் படத்தை பயன்படுத்தக்கூடாது. தேமுதிக கொடி, தேமுதிக கரை வேட்டியை பயன்படுத்தக்கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, விஜயகாந்த் படத்தையோ, தேமுதிக கொடியையோ மக்கள் தேமுதிக பயன் படுத்தவில்லை. அதே நேரத்தில் தேமுதிக கரை வேட்டியை கட்டும் முடிவில் இருந்து மாறப் போவதில்லை எனவும் சந்திரகுமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கரைவேட்டிக்கு தேமுதிக காப்புரிமை ஏதேனும் பெற்றிருக்கிறதா எனவும் சந்திரகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.