செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது, ''சேலத்தில் நாளை நான் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளேன். சேலத்தில் தொடங்கி
நாமக்கல், ஈரோட்டில் பிரசாரம் மேற்கொள்கிறேன். ஜெயலலிதாவின் செயலற்ற ஆட்சியை அம்பலப்படுத்துவதாக எனது பிரசாரம் இருக்கும். மதுவிலக்கை படிப்படியாக கொண்டு வருவேன் என்று ஜெயலலிதா கூறுவதை மக்கள் நம்ப தயாராக இல்லை. 5 ஆண்டு ஆட்சியில் மக்களை கஷ்டப்படுத்தியது போதாது என, பிரசாரத்தின் போதும் கடும் வெயிலில் மக்களை ஜெயலலிதா கஷ்டப்படுத்துகிறார்.
வெயிலில் செல்ல வேண்டாம் என்று மக்களை அரசு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். ஆனால் அ.தி.மு.க.வோ, ஜெயலலிதா பிரசார கூட்டத்திற்காக மக்களை வெயிலில் பல மணி நேரம் காக்க வைத்து வதைக்கிறது. எந்த ஊருக்கு ஜெயலலிதா வருவாரோ என மக்கள் அச்சத்தில் உள்ளனர். தி.மு.க. தலைவர்களோ மக்கள் இருக்கும் இடத்துக்கே சென்று மக்களை சந்திக்கின்றனர்.
ஜெயலலிதா கூட்டத்துக்கு வந்த இரண்டு பேர் வெயில் மற்றும் நெரிசலால் உயிரிழந்துள்ளனர். ஜெயலலிதா பொதுக்கூட்டத்துக்கு பாதுகாப்பு தர வந்த காவலர்கலே வெயிலால் மயங்கி விழுந்துள்ளனர். பொதுமக்கள் வெயிலில் வாடும்போது ஜெயலலிதா மட்டும் 18 டன் ஏசி உள்ள குலுகுலு மேடையில் உட்கார்ந்து கொண்டு பேசுகிறார்" என்றார் காட்டமாக.