புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஏப்., 2016

விஜயகாந்த் முதல்வர் பதவிக்கு தகுதியற்றவர் என்பதற்கு ராதிகா சொல்லும் லொள்ளு காரணம்!

தமிழகத்தின் முதலமைச்சராவதற்கு விஜயகாந்திற்கு தகுதி இல்லை என்று சமத்துவ மக்கள் கட்சியின் மகளிர் அணித் தலைவர் ராதிகா
சரத்குமார் தெரிவித்துள்ளார்.

அ.இ.ச.ம.க தலைவர் ஆர்.சரத்குமார் அ.தி.மு.க கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். அவருக்கு திருச்செந்தூர் தொகுதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஜெயலலிதா பிரசாரத்தை துவங்கிய அதே நாளில் திருச்செந்தூரில் தேர்தல் காரியாலத்தை திறந்து வைத்தார் சரத்குமார். 15ம் தேதி முதல் 17ம் வரையில் சரத்குமாரை ஆதரித்து அவரது மனைவி ராதிகா சரத்குமார் பிரசாரம் செய்து வருகிறார்.

உடன்குடியில் பிரசாரம் செய்த ராதிகா, ஜெயலலிதாவின் ஆட்சியை புகழ்ந்து தள்ளுவதோடு, மற்ற கட்சியினரை ஒரு பிடி பிடித்துவிட்டார். "தனிமனித விமர்சனம் செய்ய மாட்டேன் என பேசிக் கொள்ளும் அவர், ‘நமக்கு நாமே என சொல்லிக் கொண்டு நாடு முழுவதும் சுற்றிய ஸ்டாலின் தனக்கு போதுமான செல்வாக்கு இல்லை என்றதும் தனது அப்பாவை மீண்டும் முதல்வராக்கும்வோம் என பேசிவருகிறார். கூடா நட்பு கேடாய் முடியும் என காங்கிரஸ் கட்சியை விமர்சித்த கருணாநிதி, இப்போ காங்கிரஸோடு கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறார். தொண்டனே இல்லாத கட்சி காங்கிரஸ். அந்த கட்சியில் தலைவர்கள் மட்டும்தான் இருக்கிறார்கள். அவர்களும் வெவ்வேறு திசையில் இருக்கிறார்கள். அவர்களை வைத்து ஒரு புண்ணியமும் இல்லை. 

அப்படி இப்படியென ஆறு கொள்கை கொண்ட ஆறு தலைவர்களை கொண்ட குழப்பமான கூட்டணித்தான் மக்கள் நலக் கூட்டணி. அவர்களால் ஒரு முடிவும் எடுக்க போவதில்லை. திணறுவதே மிஞ்சும். விஜயகாந்தை பத்தி எனக்கு நன்றாக தெரியும். அவர் கூட நான் நடித்திருக்கிறேன். அவருக்கு நாக்கை துறுத்திக் கொண்டு பைட் போட மட்டும்தான் தெரியும். வேறு அவரின் அறிவும் திறமையும் எனக்கு தெரியும். அவர் முதல்வராக இருப்பதற்கு எந்த தகுதியும் கிடையாது. அவர் பேசுவது அவருக்கே தெரியவில்லை. அவருக்கு எதோ உடல்நிலை சரியில்லை என சொல்றாங்க, அதுக்காக வருத்தப்படுகிறேன்.
 
திறமையானவராக ஜெயலலிதா விளங்கி வருகிறார். அவரை மீண்டும் முதல்வராக வர வைக்க வேண்டும். அந்த பணிக்காகவே எனது கணவரும் உங்களில் ஒருவருமான சரத்குமார் உங்களை நாடி வருகிறார். அவரை ஆதரிக்க வேண்டும். அவர் படித்தவர், சிறந்த பண்பாளர், மக்கள சேவை செய்ய துடிப்பவர். அவரது சொந்தக்காரர்கள் இங்கே நிறைய இருக்கிறார்கள் என கேள்விபட்டேன். உங்கள் எல்லோரையும் நம்புகிறேன். இவரை எதிர்த்து போட்டிபோடும் தி.மு.க வேட்பாளர் அனிதாராதாகிருஷ்ணன், கடந்த நாளரை ஆண்டுகளாக தொகுதி பக்கமே வராமல் காணாமல் போயிருந்தார். அவர் தொடர்ந்து காணாமலே போய்விடுவார். தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் இடையே நடக்கும் இந்த தேர்தலில் தர்மம் வெல்லும்’’ என்று பேசினார்

ad

ad