புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 மே, 2016

தமிழக தேர்தல்: யாருக்கு எத்தனை இடங்கள்? புதிய தலைமுறை கருத்துக் கணிப்பு வெளியீடுஅதிமுக 164திமுக 66



தமிழகத்தில் மே மாதம் 16 ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், பல்வேறு ஊடகங்கள் கருத்துக்
கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன.

நியூஸ் 7 தொலைக்காட்சியும் தினமலர் நாளிதழும் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில், திமுக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

மற்றொரு தனியார் தொலைக்காட்சியான தந்தி டிவியும் தொகுதிவாரியான கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில் புதிய தலைமுறை, ஏ.பி.டி. நிறுவனம் இணைந்து நடத்திய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன் முடிவுகளில், அதிமுக 164 இடங்களில் வெற்றி பெறும் என்றும், திமுக 66 இடங்களைப் பிடிக்கும் என்றும் தெரிய வந்துள்ளது.

மற்ற கட்சிகளுக்கு 4 இடங்கள் ம‌ட்டுமே கிடைக்கும் என்றும் கருத்துக் கணிப்பு முடிவு தெரிவிக்கிறது. எந்‌தக் கட்சி‌க்கு வாக்களிக்கப் போகிறீர்கள் என்ற கேள்விக்கு அதிமுகவுக்கு 38 பு‌ள்ளி 58 ‌சதவிகித‌ம் பேரும், திமுகவுக்கு 32 புள்ளி 11 சதவிகிதம் பேரும் ஆதரவு தெரிவி‌த்தனர். தேமுதிக கூட்டணிக்கு 8 புள்ளி 55 சதவிகிதமும், பாமகவுக்கு‌ 4.47 சதவிகிதமும், நாம் தமிழ‌ர் கட்சிக்கு 2 புள்ளி 12 சதவிகிதமும் ‌ஆதரவு தெரிவிக்கப்பட்டது.‌‌

பா‌ர‌திய ஜனதா 1 புள்ளி 96 சதவிகிதமும், தெரியாது என்று 8 புள்ளி 45 சதவி‌தமு‌ம் பதிலாகக் கிடைத்தன. எந்தக் கட்சி நிலையான ஆட்சியைத் தரும் என்ற கே‌‌ள்விக்கு, ஆய்வில் பங்கேற்றவர்களில் 37 புள்ளி 96 சதவிகிதத்தினர் அ‌திமுகவை தேர்வு செய்‌தனர். 3‌1 புள்ளி 33 சதவிகிதம் பேர்‌ திமுகவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

தேமுதிக கூட்டணிக்கு 7 புள்ளி 67 ச‌தவிகிதமும், பாமகவுக்கு 4 புள்ளி 27 சதவிகிதமும் ‌ஆதரவு கிடைத்தது.எனினு‌ம், மீண்டும் ஆட்சி ‌அமைக்க அதிமுகவுக்கு வாய்ப்பளிப்பீர்களா என்ற கேள்விக்கு 51 புள்ளி 68 சதவிகிதம் பேர்‌ இல்லை என்றும், 42 புள்ளி 69 சத‌விகி‌தத்தினர் ஆம் என்றும் பதிலளித்தனர்.

ad

ad