புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 மே, 2016

அதிமுக கவுன்சிலர் வீட்டில் ரூ.40 லட்சம் பறிமுதல்

தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 16-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது.  வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க தமிழகம் முழுவதும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.  அவர்கள் இரவு-பகலாக அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். இதுவரை ஆவணம் இன்றி எடுத்து செல்லப்பட்ட சுமார் ரூ. 90 கோடி வரை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் மடிப்பாக்கம், பொன்னியம்மன் கோவில் அருகே வசித்து வரும் 169-வது வார்டு மாநகராட்சி கவுன்சிலர் ஜெயச்சந்திரன் வீட்டில் கட்டு கட்டாக பணம் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

தேர்தல் அதிகாரி செந்தில்வேல் தலைமையில் அதிகாரிகள் நேற்று இரவு ஜெயச்சந்திரன் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனை இன்று அதிகாலை வரை நீடித்தது.

அப்போது கட்டு கட்டாக ரூ. 40 லட்சத்து 38 ஆயிரத்து 148 ரொக்கம் இருந்தது. பணத்திற்கான ஆவணம் இல்லை. இதையடுத்து அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக தேர்தல் அதிகாரிகள், வருமான வரித்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்களும் விசாரணை நடத்தி வருகிறார்கள்

ad

ad