புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஆக., 2016

இலங்கை – அவுஸ்திரேலியா இடம்பெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு இடையில் இடம்பெற்ற மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 163 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
இலங்கை – அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் உள்ள எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெற்றது.
இதில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
சந்திமால்(132), தனன்ஜெய டி சில்வா (129) ஆகியோரின் அதிரடி சதத்தால் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 355 ஓட்டங்களை குவித்தது.

இதன் பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய அவுஸ்திரேலிய அணிக்கு அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித் (119) மற்றும் ஷேன் மார்ஷ் (130) ஆகியோர் சதம் அடித்து அணியை வலுவான நிலைக்கு மீட்டனர்.
24 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இலங்கை அணி தனது 2ஆவது இன்னிங்சை தொடங்கியது.
இலங்கை அணி சார்பில் கௌஷல் சில்வா அதிக பட்சமாக 115 ஓட்டங்களை எடுத்தார்.
போட்டியின் இறுதி நாளான இன்று 8 விக்கெட்டுக்களை இழந்து 347 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில் இலங்கை அணி டிக்ளே செய்து அவுஸ்திரேலியாவுக்கு ஆட வாய்ப்பளித்தது.
இதனையடுத்து 324 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணிக்கு டேவிட் வோனர் மாத்திரம் சிறப்பாக ஆட்டத்தினை ஆடி 64 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.
ஆஸி அணியின் ஏனைய வீரர்கள் எவரும் பிரகாசிக்க தவறிய நிலையில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து ஆஸி அணி 160 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.
இதனால் 163 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றிவாகை சூடியது.
இந்த போட்டியின் சிறப்பாட்டக்காரராக இரண்டு இன்னிங்சிலும் 13 விக்கட்டுக்களை வீழ்த்தி சாதனை படைத்த ரங்கண கேரத் தெரிவானார்.
அவுஸ்திரேலியா அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியை இலங்கை அணி முழுமையாக கைப்பற்றி சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

ad

ad