புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஆக., 2016

பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து வரலாறு படைப்பாரா? - அரைஇறுதியில் இன்று பலப்பரீட்சை

பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து வரலாறு படைப்பாரா? - அரைஇறுதியில் இன்று பலப்பரீட்சை
 ஒலிம்பிக் பேட்மின்டன் போட்டியில் பி.வி.சிந்து மோதும் அரை இறுதி ஆட்டம் இன்று நடக்கிறது.
இதில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைப்பாரா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறார்கள்.
ரியோ ஒலிம்பிக்கில் பேட்மின்டன் போட்டியில் இந்தியாவை சேர்ந்த 7 வீரர்- வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் மனு அட்ரி- சுமித் ரெட்டி ஜோடி தொடக்க சுற்றில் தோற்று நாக்-அவுட் வாய்ப்பை இழந்தது.

இதேபோல பெண்கள் இரட்டையர் பிரிவிலும் ஜூவாலா கட்டா- அஸ்வின் ஜோடியும் தொட
க்க சுற்றில் தோற்றது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் முன்னணி வீராங்கனை சாய்னா நேவாலும், பெண்கள் ஒற்றையரில் தொடக்க சுற்றை தாண்டவில்லை.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் களம் கண்ட ஸ்ரீகாந்த் கடாம்பி கால்இறுதியில் சீன வீரர் லின்டானிடம் போராடி தோற்று அரை இறுதி வாய்ப்பை இழந்தார்.

பேட்மின்டன் களத்தில் பி.வி.சிந்து மட்டும் உள்ளார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் அரை இறுதிக்கு முன்னேறி உள்ளார். பி.வி.சிந்து கால்இறுதியில் 2-ம் நிலை வீராங்கனையான சீனாவின் வாங் யுஹானை வீழ்த்தி அரை இறுதிக்குள் நுழைந்தார்.

பி.வி.சிந்து மோதும் அரை இறுதி போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் 6-ம் நிலை வீராங்கனையான நோஜோமி ஒகுஹராவுடன் பலப்பரீட்சை நடத்துகிறார்.

இதில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிட்டால் தங்கம் அல்லது வெள்ளி பதக்கம் உறுதியாகிவிடும். மேலும் ஒலிம்பிக் பேட்மின்டனில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்து முதல் இந்தியர் என்ற வரலாற்று பெருமையையும் பெறுவார்.

ஒரு வேளை அரை இறுதியில் தோற்றால் வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் மோத வேண்டும்.

கடந்த ஒலிம்பிக்கில் சாய்னா நேவால் அரை இறுதியில் தோற்று வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் வென்றார். இதேபோல் இல்லாமல் பி.வி.சிந்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ad

ad