புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஆக., 2016

கனடாவில் சிறப்பாக நடைபெற்ற நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது சர்வதேச தமிழர் தடகள விளையாட்டுப்போட்டி

கனடா மற்றும்  தமிழீழ தேசிய கொடியேற்றங்களுடனும்,தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் மற்றும் அக வணக்கத்துடனும் போட்டிகள்காலை
9மணியளவில் ஆரம்பமாகியது.
இதில் பிரதம அதிதியாக  Mr. M. Jeevaratnam   அவர்கள் கலந்து சிறப்பித்து இருந்தார். இவர் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கான விளையாட்டு உதவி நிர்வாகஸ்தராக கடமையாற்றி ஓய்வுபெற்ற உயர் அதிகாரியாவார்.
சிறப்பு விருந்தினராக Mr.S.Thevarajah  (He was the bronze medalist at the World Championship in Vancouver in both long jump and triple jump)அவர்கள் கலந்து கொண்டார்  அவரை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் துணைப்பிரதமர்  Mr . Thavendra Rajah  அவர்களும், விளையாட்டு – சமூக நல அமைச்சர் Mr. Jeyakumar Iyaththurai அவர்களும் கௌரவித்தனர்..மார்க்கம் 7ஆம் வட்டார Councilor Mr. Logan Kanapathiஅவர்கள் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டார்                                                                                                                                                .
அத்துடன்  Shahph Puma Sports Club, United Tamil Sports Club, Seelan Rangers Sport Club  ஆகிய கழகங்களும் பல தனிப்படட போட்டியாளர்கள்  பங்குபற்றினர்
அமெரிக்காவிலிருந்தும் வந்து பங்குபற்றிய போட்டியாளர்களோடு சேர்த்து 250 க்கும் அதிகமானோர் இதில் கலந்துகொண்டனர். 100 க்கும் அதிகமான பார்வையாளர்கள் இப்போட்டிகளை கண்டுகளித்தார்கள். Tamil Canadian Sports Associationகழகங்களை   ஒருங்கிணைத்து,  தடகள போட்டி நிகழ்வுகளை நடாத்த உதவினார்கள்
இந் நிகழ்வில் தொண்டர்களாக பங்கு பற்றியவர்களிட்கும்,மக்களிடம் செய்திகளை எடுத்து சென்றும்,நிகழ்வில் கலந்து கொண்டும் சிறப்பித்த ஊடகங்களிற்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறது.DSC_7315DSC_7316DSC_7317DSC_7320DSC_7325DSC_7327DSC_7328DSC_7330DSC_7332DSC_7333DSC_7335DSC_7338DSC_7340DSC_7346DSC_7348DSC_7353DSC_7354DSC_7358DSC02302

ad

ad