புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 அக்., 2016

மார்ச் மாதம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் நடைமுறை தொடங்கும் - தெரீசா மே

பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கான முறையான நடவடிக்கைகள் அடுத்த
ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும் என்று பிரிட்டன் பிரதமர் தெரிவித்திருக்கிறார்.
 நான்கு தசாப்தங்களுக்கு முன்னதாக பிரிட்டனை ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் இட்டுசென்ற சட்டத்தை ரத்து செய்வது அதனை மீண்டும் இறையாண்மையும், சுதந்திரமும் கொண்ட நாடாக உருவாக்கும்.
கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராக கட்சி மாநாட்டில் அவருடைய முதலாவது உரையை வழங்குவதற்கு முன்னதாக அவர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.
நான்கு தசாப்தங்களுக்கு முன்னதாக பிரிட்டனை ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் இட்டுசென்ற சட்டத்தை ரத்து செய்கின்ற திட்டங்களை தெரீசா மே பின்னர் வெளியிடுவார்.
இந்த சட்டத்தை ரத்து செய்வது பிரிட்டன் மீண்டும் இறையாண்மையும், சுதந்திரமும் கொண்ட நாடாக உருவாகின்ற முதல் நிலையை பிரதிநிதித்துவப்படுத்தும் என்றும், இது பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு முறையாக விலகுவது வரை உருவாக போவதில்லை என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

ad

ad