புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 அக்., 2016

பதவிக்கு இப்படியெல்லாம் ஒன்று சேர்கிறார்கள்..!' இது உள்ளாட்சி கூத்து

உள்ளாட்சித் தேர்தலில் பதவிக்காக தி.மு.க, அ.தி.மு.க.வினர் இடையே நடக்கும் களேபரம்
பொது மக்களையே திணற வைத்துள்ளது. பதவிக்காக கட்சிபாகுபாடு இல்லாமல் கூட்டணி அமைத்து அவர்கள் செயல்படுவது வெட்டவெளிச்சமாக தெரியவந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியத்தில் கட்சி பாகுபாடு இல்லாமல் தி.மு.க, அ.தி.மு.க.வினர் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. போட்டியிட வாய்ப்பு கிடைத்த கட்சியினர் போட்டி போட்டு வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர். வாய்ப்பு கிடைக்காதவர்கள் கட்சி நிர்வாகிகளிடம் முறையிட்டு வருகின்றனர். இதனால் உள்ளாட்சித் தேர்தல் ஜூரம் சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது. அ.தி.மு.க.வில் சிலர் கட்சித் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். இதனால் அ.தி.மு.க.வில் களேபரம் நடந்து வரும் சூழ்நிலையில் போயஸ் கார்டனிலேயே தென்சென்னை மாவட்டம் சார்பில் வைக்கப்பட்ட பேனர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தகவல் தலைமைக்கு தெரிந்தவுடன் பேனர் சிறிது நேரத்திலேயே அகற்றப்பட்டது. சென்னையை மட்டும் அல்லாமல் தமிழகம் முழுவதும் சீட் கிடைக்காத நிர்வாகிகள் பல்வேறு வகையில் தங்களது எதிர்ப்பை ரகசியமாக தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து அ.தி.மு.க.வினர் கூறுகையில், "கடம்பத்தூர் ஒன்றியத்தில் யூனியன் சேர்மன் பதவிக்கு போட்டியிட அ.தி.மு.க சார்பில் தாமரைச்செல்வி, மாலதிகுமார் ஆகியோர் விருப்ப மனு தாக்கல் செய்தனர். இதில் மாலதிகுமாருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. கடந்த உள்ளாட்சித் தேர்தலின் போதும் அ.தி.மு.க சார்பில் மாலதிகுமார் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். அவரை எதிர்த்து தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் சரஸ்வதி. இவர்தான் சிட்டிங் யூனியன் சேர்மனாக இருந்து வருகிறார். இவரும், மாலதிகுமாரும் உறவினர்கள். இதனால் தி.மு.க வெற்றிக்கு மாலதிகுமார் உதவியதாக கடந்த முறையே குற்றம் சாட்டினர். இந்த முறையும் மாலதி குமாருக்கே வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளதால் சரஸ்வதி வெற்றி உறுதி என்று பரவலாக பேசப்படுகிறது. எனவே, மாலதி குமாரை மாற்ற வேண்டும் என்று மாவட்ட செயலாளரிடம் கடம்பத்தூர் யூனியன் அ.தி.மு.க.வினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
கடம்பத்தூர் பஞ்சாயத்தை சேர்ந்த அ.தி.மு.க நிர்வாகிகள் பூபாலன், சுமதி ஆகிய இருவருக்கும் மாவட்ட கவுன்சிலருக்கு சீட் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவும் கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மிரட்டலுக்குப் பயந்து தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கியுள்ளார் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வெங்கத்தூர் பஞ்சாயத்தை சேர்ந்த அ.தி.மு.க நிர்வாகி ஒருவர். அவரை மிரட்டியதே அ.தி.மு.க.வினர்தான். வாய்ப்பு கிடைத்தும் போட்டியிட விருப்பம் இல்லை என்று அவர் எழுதி கொடுத்ததால் மிரட்டியவருக்கு அந்த வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தில் கட்சிக்காக உழைத்தவர்களுக்கு சீட் கொடுக்கப்படவில்லை என்று கட்சித் தலைமைக்கு ஏராளமான புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதில் மாவட்டச் செயலாளர் அலெக்ஸாண்டர், தன்னுடைய மனைவி வளர்மதிக்கு சீட் கொடுக்கப்பட்ட விவகாரம் குறித்தும் புகார் சொல்லப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு வார்டில் ஊர் மக்கள் சேர்ந்து ஏலம் போட்டு கவுன்சிலரை தேர்ந்தெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
நெல்லை மாவட்டம், குற்றாலம் சிறப்பு பேரூராட்சியில் நிலைமை வேறுவிதமாக உள்ளது. அதாவது, பாலியல் சம்பந்தமான வழக்கில் கைது செய்யப்பட்ட அ.தி.மு.க நிர்வாகி ஒருவருக்கு கவுன்சிலர் சீட் வழக்கப்பட்டுள்ளதாம். அவருக்கு கடந்த உள்ளாட்சித் தேர்தலில் சீட் கொடுக்கப்படவில்லை. இதனால் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்றுள்ளார். இதனால் இந்த முறை அ.தி.மு.க சார்பில் அவருக்கு சீட் கொடுக்கப்பட்டுள்ளது" என்றனர். 

ad

ad